அன்புள்ள ஜெயமோகன்
உங்கள் அமைப்பு வழியாக நடத்தும் தத்துவ வகுப்புகளைப் பற்றி கேள்விப்பட்டேன்.இந்திய தத்துவத்தை கற்றுக் கொள்வதில் எனக்கு ஆர்வம் உண்டு. தொடக்கத்திலிருந்து இந்திய தத்துவத்தை பயில வேண்டும் என்று பலவிதமாக முயன்றும் கூட இதுவரைக்கும் வாய்ப்புகள் அமையவில்லை .உங்கள் வகுப்பறை பற்றி இப்போதுதான் முகநூல் வழியாக கேள்விப்பட்டேன். வகுப்புகளில் சேர விரும்புகிறேன். இந்திய தத்துவத்தின் ஏழு அணிகள் முடிந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டேன். முதல் அணி வகுப்பு என்று எப்போது நிகழும் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.
ராஜசேகர் மா
அன்புள்ள ராஜசேகர்
முதல் அணி வகுப்பு ஒரு வேலை இனிமேல் ஆகஸ்ட் மாதம் நிகழ வாய்ப்புள்ளது
ஜெ












