முழுமையறிவு குழு

எங்களைப் பற்றி

இந்த தளம் எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்னும் அமைப்புடன் இணைந்தது. ஜெயமோகன் தமிழில் நாற்பதாண்டுகளாக எழுதி வரும் எழுத்தாளர். மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் உலகிலேயே பெரிய நாவலாக...

வகுப்பு அறிவிப்பு

பௌத்த மெய்யியல்  – தியான முகாம்

வி.அமலன் ஸ்டேன்லி தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞர், நாவலாசிரியர் வி.அமலன் ஸ்டேன்லி. உயிரித்தொழில்நுட்பத்தில் உயர் அறிவியலறிஞராக பணியாற்றுபவர். 2005-ல் கோயங்கா தியானப் பயிற்சியோடு பௌத்த ஆய்வுப்பயணத்தை தொடங்கிய வி.அமலன் ஸ்டேன்லி போதி ஜென்டோவில் ஜென் பயிற்சி பெற்றார்....

இன்று

பாமதி

ஒரு முக்கியமான தத்துவ நூலில் இருந்து ஒரு முக்கியமான தத்துவசிந்தனை மரபு உருவாகியது, அந்நூலின் பெயரே அந்த மரபின் பெயரும் ஆகியது. அது ஒரு பெண்ணின் பெயர், அப்பெண் அந்த தத்துவநூலில் ஒரு...

மெய்ஞானத்தைக் கற்பிக்கும் தகுதி என்ன?

https://youtu.be/ZbT6D4cwNhA சைவம் ,வைணவம் ஆகியவற்றைக் கற்பிக்க ஆரம்பிக்கும்போது எங்களுக்கு மரபார்ந்த தரப்புகளில் இருந்து எழுந்த எதிர்ப்பு "இதுக்கெல்லாம் அதிகாரம் இருக்கா?" என்பது. நான் முதலில் அடைந்த எரிச்சலால் கூர்மையாகப் பதில் சொன்னேன். "நாமம் போட்டுக்கொள்ளவோ,...

சைவமும் வைணவமும் இந்து மதமா?

மதம் வேறு தர்மம் வேறு. மதம் என்பது முன்னரே சொல்லப்பட்டதுபோல ஒரு மையமும், அதற்கான நெறிகளும், அதைப்பேணும் அமைப்புகளும் கொண்டது. தர்மம் என்பது ஒரு சிந்தனை மரபு தொன்மையில் இருந்து பல கூறுகள்...

பிரபந்த வகுப்பு, கடிதம்

அன்புடையீர் , நான் மார்ச் 22 அன்று பிரபந்தம்  பயிற்சி   வகுப்பிலும்  29 அன்று ஆலயக்கலை பயிற்சி வகுப்பிலும் பங்கு கொண்டேன்.ஒன்று அகம் சார்ந்ததாகவும் மற்றொன்று அறிவு சார்ந்ததாகவும் எனது கணிப்பில் உணர்ந்தேன். மேலும்  ஆசிரியர்கள்...

இந்துமதம் காட்டுமிராண்டி மதமா?

இயற்கை மதங்கள் எப்படி உருவாகின்றன என்பதற்கு உலகளாவிய ஆய்வுமுடிவுகள் உள்ளன. ஜோசப் கேம்பெல் முதல் குளோட் லெவிஸ்ட்ராஸ் வரை ஏராளமான அறிஞர்கள் விளக்கியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தச் சித்திரத்தை மிகச்சுருக்கமாக இப்படி விளக்குகிறேன். இயற்கை மதங்கள் தோன்றுவது...

ஆலயக்கலைப் பயிற்சி, கடலூர் சீனு

இனிய ஜெயம் குளிர் பருவத்தின்போது வந்தது, அதன் பின்னர் நேரடியாக இந்தக் கோடையில் நமது கல்விச்சாலை நோக்கி அதிகாலைப் பயணம். அந்தியூர் கடந்ததும் வரும் மலைத் தொடர்கள் மெல்லப் பசுமை குன்றி மலையிடை  குவடுகளில்...

செறிவான உரையின் தேவை என்ன?

https://youtu.be/urCKI6owTWI இன்று நாம் ஒரு நாளில் பலரைச் சந்திக்கிறோம். பலருடன் உரையாடுகிறோம். இன்று கூர்மையான, சுவாரசியமான உரையாடல்கள் தேவையாகின்றன. மேடையுரைகள் கச்சிதமாக அமையவேண்டியுள்ளது. அப்படி இல்லாமல் 'மனம்போன போக்கில்' பேசும் உரைகள் சலிப்பூட்டுகின்றன. அவற்றை...

இந்துமதம் என ஒன்று உண்டா?

சென்ற ஒரு மாதமாகவே என்னிடம் வாசகர்கள் பலர் மின்னஞ்சலில் இக்கேள்வியை கேட்டுக்கொண்டிருந்தார்கள்- இந்து மதம் என ஒன்று உண்டா? அவர்களில் பலர் இளைஞர்கள். நவீனக்கல்வி கற்றவர்கள். பண்பாட்டின்மேல் ஆர்வம் கொண்டவர்கள். ஆனால் அவர்கள்...

செயலுக்கான சிறந்த வழி

அன்புள்ள ஜெ, தமிழின் தலைசிறந்த எழுத்தாளராக திகழ்கிறீர்கள். தொடர்ச்சியாக எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள். உங்கள் எழுத்தின் அளவும் அதேசமயம் ஆழமும் தீவிரமும் மலைக்கச் செய்பவை. ஒருவரே இவற்றை எல்லாம் எழுதினாரா என்ற பிரமிப்பு உருவாகிக்கொண்டே இருக்கிறது....

இணையக் கல்வி, இணையப்போதை – கடிதம்

  கூடியிருந்து கற்றல்… கூடியிருந்து கற்றல்… கற்று என்ன பயன்? கம்ப்யூட்டர் விளையாட்டும் குழந்தைகளும் தவிர்ப்பவர்கள் கல்வியும் சோலையும் கல்விக்கான மனநிலை என்ன? ஏன் நேர்க்கல்வி? அன்புள்ள ஜெ இணைய வழிக் கல்வி பற்றி நீங்கள் எழுதிய பதில்கள் முக்கியமானவை. நான் இந்த விஷயத்தை என்னுடைய ஆசிரியவாழ்க்கையில்...