ஆலயக்கலைப் பயிற்சி

    ஆலயக்கலைப் பயிற்சி

    தொடர்புக்கு மின்னஞ்சல் செய்யவும் - [email protected]

    மே மாதம் 10, 11 மற்றும் 12 தேதிகளில் ஜெயக்குமார் பரத்வாஜ் நடத்தும் ஆலயக்கலைப் பயிற்சி. இப்பயிற்சிக்குப் பின் அடுத்தகட்ட பயிற்சிகள் சில திட்டமிடப்பட்டுள்ளன.


    நம்மைச்சூழ்ந்து மாபெரும் கலைப்ப்பொக்கிஷங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆலயமும் ஒரு மாபெரும் கலைக்கூடம். உலகமெங்குமிருந்து அவற்றை வந்து பார்த்துச் செல்கிறார்கள். நம்மால் அவற்றை பார்க்கமுடிவதில்லை. ஏனென்றால் நம் விழிகள் கலைப் பார்வையற்றவை. நமக்கு எந்த அறிமுகமும் இல்லாத ஒரு பொன்னுலகம் நம்மருகே இருந்துகொண்டே இருக்கிறது.

    ஓர் எளிய அறிமுகம், ஒரு முறையான பயிற்சி போதும் நம் கண்கள் திறந்துகொள்வதைக் காணலாம். ஏனென்றால் நாம் ஏற்கனவே நம் ஆழ்மனதில், நம் கனவில் இவற்றை அடைந்துள்ளோம். நம் மொழியினூடாக, நம் பண்பாட்டினூடாக. மேலே இருக்கும் சாம்பலைச் சற்று விலக்குவதுதான் இப்பயிற்சி. ஒரு புதிய உலகம் தெரியலாகிறது. சிற்பங்கள் சடென்று பொருள்கொள்கின்றன.

    அத்தகைய கலைக்கல்வி இப்பயிற்சி. இத்துறையில் இன்று தமிழகத்திலிருக்கும் முதன்மை நிபுணர் ஒருவரால் அளிக்கப்படுவது. சற்று நம்மை கல்விக்கு ஒப்புக்கொடுத்தாலே போதுமானது அதை அடைய.

    ஜெயக்குமார் அவரிடம் பயின்றவர்களுடன் ஹம்பிக்கும், அஜந்தாவுக்கும்  ஒரு கலைப்பயணம் மேற்கொண்டார். மெல்ல மெல்ல அது ஒரு கலைச்சமூகமாக உருத்திரண்டுகொண்டிருக்கிறது.

    தொடர்புக்கு மின்னஞ்சல் செய்யவும் - [email protected]

    முந்தைய கட்டுரைகாட்சிக்கலைப் பயிற்சி
    அடுத்த கட்டுரையோகக்கொண்டாட்டம்