இந்திய தத்துவ முகாம் நான்காம் நிலை

  இந்திய தத்துவ முகாம் நான்காம் நிலை

  தொடர்புக்கு மின்னஞ்சல் செய்யவும் - [email protected]

  ஜூன் 14 15 16 தேதிகளில் இந்திய தத்துவ அறிமுகம் நான்காம் நிலை நிகழும். முதல் மூன்றுநிலைகளில் பங்கெடுத்தவர்களுக்காக மட்டும். ( ஏப்ரல் 12 13 14 தேதிகளில் இரண்டாவது நிலை பயிற்சியும், ஏப்ரல் 26 27 28 தேதிகளில் மூன்றாம் நிலை பயிற்சிகளும் நிகழ்கின்றன)


  இப்பயிற்சி ஒரு தத்துவ நூலை பயில்வது போன்றவை அல்ல. தத்துவம் சார்ந்த தகவல்களும் சிந்தனைகளுமல்ல அல்ல இவ்வகை வகுப்புகளில் கற்பிக்கப்படவேண்டியவை. முதலில் கற்பிக்கப்படவேண்டியது ’தத்துவப்படுத்தல்’ எனும் சிந்தனைப் பயிற்சிதான்.

  நாம் சிந்திப்பது இரண்டுவகையில். ஒன்று எளிய அன்றாடத் தர்க்கம் சார்ந்து. இரண்டு உணர்ச்சிகளின் தொடராக. இரண்டுக்கும் அப்பாலுள்ளது தத்துவசிந்தனை. அது மையமும் அதைச்சார்ந்த ஒழுங்கும் கொண்ட ஒன்று. சிந்தனையை வைத்து விளையாடுவது அல்ல. அது ஒருவகை மலையேற்றம். அதை பயிலத்தான் வேண்டும். இயல்பாக நம்மில் நிகழும் சிந்தனைமுறையை ரத்துசெய்து தத்துவார்த்தமாகச் சிந்தனைசெய்ய பயிற்சி எடுக்கவேண்டும். முதலில் என்ன அது என தெரிந்தால்தான் பயிற்சிக்குச் செல்லமுடியும்.

  தத்துவ வகுப்புகள் தத்துவத்தை மட்டும் கற்பிப்பவை அல்ல. அவை சிந்தனைசெய்ய கற்பிக்கின்றன. பொதுவாகவே நாம் சிந்திப்பதும் பேசுவதும் கூர்மையாகிவிடுகிறது. நம் பார்வைகள் மாறத்தொடங்குகின்றன. தத்துவம் அளிக்கும் கொடை என்பது அதுதான்.

  இந்திய தத்துவம் என்பது இந்திய ஆன்மிகம், மதம், கலைகள், இலக்கியங்கள் ஆகியவற்றுக்கு ஆதாரமானது. நாம் நம்மையறியாமலேயே புழங்கும் பல தளங்களுண்டு. பக்தி, சோதிடம், வாஸ்து, ஆசாரங்கள். அனைத்துக்கும் அடிப்படை இந்திய தத்துவப்பரப்பே. அதை அறிவதென்பது நம்மை நாமே அறிவது. நாம் ஏற்கனவே அறிந்தவை எல்லாம் தத்துவக் கல்வியுடன் இணைகையில் புதிய ஒளி கொள்வதைக் காணலாம்.

  மேலைச்சிந்தனைகளே இன்று நமக்கு அறிவியலாக, தொழில்நுட்பமாக, அரசியலாக, சமூகவியலாக வந்துகொண்டிருக்கின்றன. நாமடைந்த கல்வி முழுக்க முழுக்க மேலைத்தத்துவத்தின் அடிப்படை கொண்டது. அதில் விடுபடுவது இந்தியதத்துவ சிந்தனைகளின் தரப்பே. அதை இப்படி மாற்று அமைப்புகள் வழியாகவே முறையாகக் கற்கமுடியும்.

  இது நம் கல்லூரிகளிலுள்ளதுபோல பாடங்களை ‘சொல்லும்’ முறை அல்ல. அடிப்படையில் தத்துவப்படுத்துதல் (philosophizing) என்பதே முதலில் பயிற்றுவிக்கப்படும். தத்துவரீதியாக சிந்தனை செய்தலை கற்பித்தல். அதிலுள்ள பிழைகளை தொடக்கத்திலேயே சுட்டிக்காட்டுதல்.

  அதன்பின் தத்துவம் என்றாலென்ன என்பதன் அறிமுகம். அதன்பின்னரே தத்துவத்தின் ஒட்டுமொத்தச் சித்திரம்.

  இப்போதைக்கு, இந்து மெய்மரபுகள் சார்ந்த தத்துவம் மட்டுமே கற்பிக்கப்படும். பிற மரபுகள் பிற்பாடு கற்பிக்கப்படலாம். குறிப்பாக பௌத்த, சமண, கிறிஸ்தவ மெய்யியல்கள்.

  இந்து தத்துவங்களைப் பொறுத்தவரை அவை வெறுமே கொள்கைகள், தர்க்கமுறைகள் மட்டுமல்ல. அவை ஒட்டுமொத்த வாழ்க்கைப்பார்வைகளும், செயல்முறைகளும்கூட. அவற்றை அப்படித்தான் மரபான அமைப்புகளில் கற்பிக்கிறார்கள்.</

  தொடர்புக்கு மின்னஞ்சல் செய்யவும் - [email protected]

  முந்தைய கட்டுரைஆயுர்வேத வகுப்பு
  அடுத்த கட்டுரைஇந்திய தத்துவ முகாம் இரண்டாம் நிலை