பறவை பார்த்தல்

    பறவை பார்த்தல்

    தொடர்புக்கு மின்னஞ்சல் செய்யவும் - [email protected]

    பறவை பார்த்தல் நிகழ்வில் சிலர் வரமுடியாத நிலை என அறிவித்தமையால் சிலருக்கு இடமுள்ளது. மே மாதம் 14 மற்றும் 15


    பறவைகளைப் பார்த்தல் என்பது சற்று பயிற்சி தேவைப்படும் ஒரு துறை. அதற்கான வழிமுறைகளும் மனநிலைகளும் உள்ளன. அவற்றை கற்றுத்தரவேண்டும். அத்துடன் பறவைபார்த்தலை மற்றவர்களுடன் சேர்ந்து செய்வதும் இன்றியமையாதது.

    பறவை பார்த்தல் ஏன் இன்றைய சூழலில் ஒரு முக்கியமான பொழுதுபோக்காகவும் அறிவுப்பயிற்சியாகவும் உள்ளது? முதன்மையாக, அது இயற்கையுடன் இணைந்திருப்பதற்கான ஒரு மனப்பயிற்சி. இயந்திரங்களுடன் சிறிய அறைகளில் ஒடுங்கி வாழ விதிக்கப்பட்டுள்ள நம் சூழலில் அது அளிக்கும் உளவிடுதலை மிகமிக முக்கியமானது. இயற்கையை கூர்ந்து அறிவதென்பது ஒரு பெரும் தியானம்.

    சிறுவர், சிறுமியரைப் பொறுத்தவரை இப்பயிற்சி அவர்களை ஈர்த்து அவர்களின் கவனத்தைச் சிதறடிக்கும் இன்றைய அதிவேகக் கேளிக்கைகளில் இருந்து வெளியேறுவதற்கான வழி. பறவை பார்த்தல் என்பது மிகப்பொறுமையாகச் செய்யப்படவேண்டிய ஒன்று. பொறுமையைப் பயில்தல் என்றே சொல்லலாம். அது அளிக்கும் அகப்பயிற்சி பலவகையிலும் உதவக்கூடியது.

    இந்த கோடையில் பறவைகளை பார்ப்பதற்கான ஒரு இரண்டுநாள் பயிற்சியை மாணவர்களுக்கு அளிக்கலாம் என திட்டமிட்டிருக்கிறோம். 10 வயதுக்கு மேல் முதிர்ந்த மாணவர்கள் பங்குகொள்ளலாம். (மாணவிகள் பெற்றோருடன் வரவேண்டும்) முதல் அணியில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மாணவர்களுக்கான இப்பயிற்சி மலைச்சிற்றூரிலுள்ள வேலியிடப்பட்ட காடுபோன்ற தோட்டத்திற்குள்ளும் வெளியிலும் நிகழும். காட்டுக்குள் செல்வதில்லை.

    தொடர்புக்கு மின்னஞ்சல் செய்யவும் - [email protected]

    Additional Details

    Category -

    முந்தைய கட்டுரைஇந்திய தத்துவ முகாம் மூன்றாம் நிலை
    அடுத்த கட்டுரைசைவசித்தாந்தம்