அரபு வளைகுடாவில் தத்துவ வகுப்புகள்

அண்ணா

வணக்கம். 

அமெரிக்கா  ஒரு நாள் தத்துவ வகுப்புகள் போல கத்தார் அல்லது மத்திய கிழக்கில் தத்துவ வகுப்புகளை நடத்த ஏதேனும் திட்டம் உள்ளதா?

இந்தத் தத்துவ வகுப்புகள் எங்கள் வாழ்க்கையை உயிர்ப்பூட்டட்டும்.

பன்னீர்செல்வம் ஈஸ்வரன்

அன்புள்ள பன்னீர்செல்வம்,

தத்துவ வகுப்புகள் நடத்தலாம்,. இரண்டு விஷயங்கள் தேவை.  ஒன்று, அங்கே அந்த வகுப்புகளை முன்னின்று ஒருங்கிணைக்க ஒருவர் தேவை. அவருக்கு உதவவும் சிலர் தேவை.

இரண்டு, அந்த வகுப்புக்கு வந்து பங்கேற்க குறைந்தது முப்பது மாணவர்கள் தேவை. அவர்கள் அளிக்கும் கட்டணம் அந்த ஆசிரியர் வந்து தங்கி கற்பிக்கும் செலவையும், கூடத்தின் செலவையும் ஏற்கவேண்டும். அத்தகையவர்கள் இருக்கிறார்களா?

தத்துவம், கலை ஆகியவற்றை கற்பது அன்றாடவேலை என்னும் மாபெரும் சலிப்புச் சுழற்சியில் இருந்து மகத்தான விடுதலையை அளிப்பது. ஆனால் அதை உணர்ந்தவர்கள் எத்தனைபேர் என்பதே முதன்மையான கேள்வி.

ஜெ 

முந்தைய கட்டுரைகுரு நித்யா இலக்கிய முகாம் பற்றி…