பக்தி இயக்கம், கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

இந்தியா என்பது பக்தி இயக்கத்தின் சிருஷ்டி என்ற ஒரு கூற்று உண்டு. இந்தியாவில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரைக்கும் பர்ந்து இருக்கும் ஒற்றைப் பேரியக்கம் என்றால் அது பக்தி இயக்கம்தான். அதன் இன்னொரு வடிவம்தான் இந்து மதச் சீர்திருத்த இயக்கம். அதிலிருந்து தான் இந்தியத் தேசிய இயக்கம் உருவாகியது. பக்தி இயக்கம் ன்னிந்தியாவிலிருந்து வட இந்தியாவுக்கு சென்றதாயினும் ஒவ்வொரு இடத்திலும் அதற்கான தனிப் பண்பாட்டு அடையாளமாக உருவாக்கியது. இன்னொரு பக்கம் இந்தியாவின் பிராந்திய அடையாளங்கள் எல்லாமே பக்தி இயக்கத்தால்தான் உருவாக்கப்பட்டவை .

பக்தியகத்தை பற்றி உங்களுடைய அந்த காணொளி சிறிதாக இருந்தாலும் சட்டென்று ஒரு ஒட்டுமொத்த சித்திரத்தை அளிப்பதாக இருந்தது.

ஜெயக்குமார்

முந்தைய கட்டுரைவேதமும் விஞ்ஞானமும்