வரலாற்றெழுத்தும் தமிழகமும்.

 

அன்புள்ள ஜெ,

வரலாறு உருவாகும் விதம், வரலாற்று எழுத்தின் வகைகள் பற்றி நீங்கள் பேசிய சுருக்கமான காணொளியை பார்த்தேன். தமிழகத்தில் இன்று மிக அதிகமாக கையாளப்படுவது திரிக்கப்படுவது வரலாறுதான். வரலாற்று எழுத்தில் உள்ள அடிப்படைகள், வரலாறு எப்படி உருவாகி வருகிறது என் எதுவுமே தெரியாமல் ஏதேனும் ஒரு தகவலை எடுத்துக் கொண்டு அதற்கு தனக்கு என்ன தோன்றுகிறதோ அதையே வரலாறாக எழுதலாம் என்பது தமிழகத்தில் இன்றைக்கு ஏற்கப்பட்டு விட்ட ஒன்று. வட இந்தியாவில் மதவாதிகள் மத வரலாறு எழுதும்போது இதைச் செய்கிறார்கள். இங்கே மதத்தின் இடத்தில் மொழியோ அல்லது சாதியோ இருக்கிறது .

இவர்களுக்கு இவர்களின் விருப்பப்படி வரலாற்றை எழுதிக் கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கையை அளிப்பவர்கள் இப்படி ஏற்கனவே வாயில் தோன்றியதே வரலாறு என்று எழுதி, அதன் வழியாக எல்லா விதமான அதிகாரங்களையும் அங்கீகாரங்களையும் அடைப்பவர்கள்; அடைந்து கொண்டிருப்பவர்கள்தான். தமிழ்ச் சூழலில் வரலாறு என்பது என்ன என்று விளக்கவேண்டியுள்ளது. அது பல்வேறு இடைவெளிகளை தொடர்ந்து நிரப்பிக் கொண்டே சென்று கொண்டிருக்கும் ஒரு தக்கபூர்வமான அமைப்பு என்பதையாவது ஒருவர் திரும்பத் திரும்ப சொல்லியாக வேண்டியிருக்கிறது .அந்த வகையிலே இந்த வரலாற்று எழுத்து பற்றிய உரையாடல் மிக மிக முக்கியமானது.

ஜார்ஜ் அருமை

முந்தைய கட்டுரைபக்தி இயக்கம், கடிதம்