
தொடர்புக்கு மின்னஞ்சல் செய்யவும் - [email protected]
நாள்: ஏப்ரல் 25, 26, 27 (வெள்ளி சனி ஞாயிறு)
மேடையுரைக்கு அவசியமானது சிந்தனை. சிந்தனைகளை ஒரு வடிவுக்குள் நிகழ்த்திக்கொள்வதற்கான பயிற்சியே மேடையுரைப் பயிற்சி. குரல், தோரணை, மொழி ஆகியவை அல்ல. அந்த தொழில்நுட்பப் பயிற்சியை நான் அளிப்பதில்லை. நான் அளிப்பது ஒருவர் கூர்மையாகச் சிந்திப்பதற்கும், அச்சிந்தனைகளை கோவையா முன்வைப்பதற்குமான பயிற்சி. அதற்கான சில அடிப்படை வழிமுறைகள். அந்தப் பயிற்சிகள் அபாரமான பயன் தருவதை நான் நிகழ்த்திய இரண்டே இரண்டு அரங்குகளில் பங்கேற்றவர்களின் பேச்சில் உருவாகியிருக்கும் பிரமிக்கத்தக்க மாறுதல் காட்டுகிறது.
மேடையுரைப் பயிற்சி என்பது ‘சொற்பொழிவு’ பயிற்சி அல்ல. மேடையில் குரல்வளை புடைக்க முழக்கமிடுவதற்கான செயல்முறைப்பயிற்சி அல்ல. அது சிந்திப்பதற்கான சில எளிய அடிப்படைகளை கற்றுத்தருவதுதான். நம் உள்ளத்தை நாம் நேரடியாகப் பயிற்றுவிக்க முடியாது. ஏனென்றால் பயிற்றுவிக்கும் ஆசிரியரும் உள்ளம்தான். ஆகவே வெளியே எதையாவது நாம் பயிலவேண்டும். உள்ளம் அதற்கேற்ப மாறிவிடும். உள்ளத்தை ஒருமையாக்க ஜபமாலையை உருட்டுவது அதனால்தான். எழுத, பேச பயில்வதென்பது உள்ளத்தை சிந்தனைக்குப் பயிற்றுவிப்பதே.
இப்பயிற்சி கோவையாகப் பேசுவதற்கு, தனி உரையாடல்களையே திறம்பட நிகழ்த்துவதற்கு மிக இன்றியமையாதது. இருபத்தொராம் நூற்றாண்டின் அடிப்படைத்தேவைகளிலொன்று இது. ஆகவே ஒரு வாழ்க்கைப் பயிற்சி.
இப்பயிற்சிக்கு மிகமிக எளிய சில அடிப்படைகள் உள்ளன. அவற்றை அறியாத காரணத்தால் ஓரளவு வாசிக்கும் பழக்கம் கொண்டவர்கள்கூட மேடையில் முனகி முனகி, முன்பின் தொடர்பில்லாமல் சொற்றொடர்களை உதிர்த்து படுத்துவதை எல்லா இலக்கியமேடைகளிலும் காண்கிறேன். அல்லது எழுதி வாசிக்கும் கொடுமை. அல்லது மிகையுற்சாகத்துடன் வாயில் தோன்றியதை கட்டுப்பாடில்லாமல், நேரக்கணக்கே இல்லாம,கேட்பவர்களை பற்றிய அக்கறையே இல்லாமல் பொழிந்து தள்ளும் வன்கொடுமை.
தொடர்புக்கு மின்னஞ்சல் செய்யவும் - [email protected]
மற்ற வகுப்புகள்
Additional Details
Category -