காணொளிகள் வழியாக…

அன்புள்ள ஜெ

உங்கள் காணொளிகளில் நீங்கள் மதம், ஆன்மிகம், கலாச்சாரம் பற்றிய பல பதில்களைச் சொல்கிறீர்கள். அவற்றை நான் தொடர்ச்சியாகக் கேட்டு வருகிறேன். என்னுடைய அறிவை வளர்ப்பதில் அவை மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. பல கேள்விகள் பதில்களைப் பெற்றுள்ளன. பல புதிய கேள்விகள் எழுகின்றன. நான் அவற்றை உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன். தனிப்பட்ட முறையில் சந்திக்கலாமா?

ஶ்ரீபதி நாயகம்

அன்புள்ள நண்பருக்கு

அக்காணொளிகள் எல்லாமே நாங்கள் நடத்தும் நிகழ்வுகளுக்காக ஆர்வமுள்ளவர்களை அழைக்கும் நோக்கம் கொண்டவை. விரிவான கல்வி அங்குதான். அக்கல்விக்குப் பின்னரே விவாதம் நிகழமுடியும். அக்காணொளிகளைக் காண்பவர்கள் அனைவரிடமும் நான் விவாதிக்க முடியாதல்லவா? அத்துடன் அக்காணொளிகள் பேசும் விஷயங்கள் நுட்பமானவை, பண்பாட்டுப்பயிற்சியும் வரலாற்றுப்பயிற்சியும் கொண்ட ஒருவரிடம் மட்டுமே அவற்றை ‘விவாதிக்க’ முடியும். எஞ்சியோருக்குக் கற்பிக்கவே முடியும். நீங்கள் ஆர்வம் கொண்டவர் என்றால் முறையாக வகுப்புகள் வழியாக கற்கவும்

ஜெ

முந்தைய கட்டுரைஇஸ்லாம், சூஃபி மரபு- வகுப்புகள்
அடுத்த கட்டுரைஆன்மிகமும் கவிதையும்