எழுத்தின் வகைகள்

அன்புள்ள ஜெ

அண்மையில் ஓர் பொழுதுபோக்கு எழுத்தாளர் நீங்கள் பேசிய எதற்கோ எதிர்வினையாக முகநூலில் வணிக எழுத்து என்று சொல்வதெல்லாம் பம்மாது, ஏன் இவர்கள் எழுதும் நூல்களை எல்லாம் அச்சிட்டு விற்கவில்லையா என எழுதியிருந்தார். இந்தவகையான கேள்விகள் தொடர்ச்சியாக எழுந்துகொண்டே இருக்கின்றன. வணிக எழுத்து- இலக்கியம் என்று ஏன் பிரிக்கவேண்டும், அதை வாசகன் பார்த்துக்கொள்ளட்டுமே என்று சொல்பவர்களும் ஏராளம். எல்லா கேள்விகளுக்கும் கச்சிதமான பதிலை கொண்ட காணொளி. சுருக்கமாகவும் ஆணித்தரமாகவும் சொல்லப்பட்ட பதில். என் நண்பர்களுக்கு அதை அனுப்பி வைத்தேன்.

சசிகுமார்

முந்தைய கட்டுரைமானுடத்தின் வெற்றி