அன்புள்ள ஜெயமோகன்,
கமல்ஹாசன் அவர்களின் காணொளி வழியாக உங்களுடைய அமெரிக்க நிகழ்வு பற்றிய செய்திகளை அறிந்து கொண்டேன். மிகப்பெரிய முன்னெடுப்பு .இன்றைய சூழலில் உலகமே பெரும் போரை எதிர்பார்த்து இருந்திருக்கும் போது கூட அது முன்னேறுவது என்பது மிகப்பெரிய சாதனை.
கமலஹாசன் அவர்கள் மிகத் தெளிவாகவே அந்த காணொளியில் அதன நோக்கம் அதன் விளைவுகள் என்னென்னவாக இருக்கும் என்பதை பற்றி எல்லாம் விரிவாக பேசியிருந்தார். மிகச் செறிவான அழகான காணொளி. அதன் வழியாக நீங்கள் உருவாக்கும் அந்த இயக்கத்தின் முக்கியத்துவம் தெரியவந்தது. அவ்ர் மனமார்ந்த ஒரு பாராட்டை தெரிவித்து இருப்பதாக தோன்றியது.
அனைவரையும் இணைத்துக்கொண்டு முன்செல்லும் இந்த இயக்கம் வெற்றிபெறவேண்டும் என வாழ்த்துகிறேன்.
ராஜசிங








