
வணக்கம்
அக்டோபர் மாதம் நடைபெற்ற பறவை பார்த்தல் நிகழ்வில் நான் எனது தம்பி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கலந்து கொண்டேன்.நான் முதல்முறையாக நித்திய வனம் வந்தேன். எனக்கு மிகவும் புது அனுபவமாக இருந்தது. நான் அங்கு சந்தித்த மனிதர்கள் ஒவ்வொருவரும் என்னை வியப்படைய செய்தார்கள். இரவில் மற்றவர்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் புத்தகத்தை வாசிப்பவர்களை பார்த்தேன். தனிமையில் இயற்கையை ரசித்துக் கொண்டிருப்பவர்களை பார்த்தேன்.
என் குழந்தைகள் விடுமுறை நாட்களில் காலை 8 மணிக்கு தான் விழிப்பார்கள். அங்கு காலை 5:30 மணிக்கு எழும்ப வேண்டும் என்றதும் எப்படி அவர்களை தயார் படுத்தப் போகிறேன் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் காலையில் கண்விழித்ததும் சோர்வுடன் இருந்தார்கள் சிறிது நேரத்தில் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து அவர்களும் தயாரானார்கள். பறவைகளை பார்க்க ஆரம்பித்த பிறகு அவர்களது நடையின் வேகம் கூடியது ஆர்வம் அதிகரித்தது எனக்கு என் குழந்தைகளை பார்க்கும் பொழுது மிகவும் வியப்பாகவும் இருந்தது.
அடுத்த நாள் என் மகனுக்கு காய்ச்சல் இருந்தது. காலை பனியில் பறவை பார்க்க போக வேண்டாம் என்று கூறினேன். நாமும் செல்வோம் எனக்கு ஒன்றும் இல்லை என்று கூறினான். அதில் அவனுக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன் இப்பொழுது வீட்டிற்கு அருகில் எந்த பறவை வந்தாலும் அதை கவனிக்கிறார்கள் பறவையின் இறகுகளை எடுத்து சேகரித்து வீட்டிற்கு கொண்டு வருகிறார்கள். எங்களையும் இயற்கையோடு இணைந்து இயங்கும் அனுபவத்தை தந்ததற்கு நன்றி.
சரிதா









