வேதமும் விஞ்ஞானமும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

பழம் பாறை, தத்துவத்தையும் அறிவியலையும் உயர் நிலையில் எடுத்து செல்லும் ஒரு கதை.  “கரமான முதல் முழு இருப்பே , நீயானஎனக்கு/நான்கதையை சொல்கிறது.  

முதல் பகுதியில் உடல் மற்றும் மூளை என்பது சிறை அதற்கு விடுதலை அளித்து மிகப் பெரிதான ஒன்றுடன் கரைந்து கொள்ளுமாறு சொல்கிறது. எல்லோருக்கும் வாய்க்கப்படாத ஒன்று, அதுவே விரும்பி அழைத்தால் மட்டுமே சாத்தியப்படுவது. மனச்சிதைவு நோயாக அல்லாமல் முழுதான அறிதலுக்கு என்னை இழுக்க முற்படுகிறது.   மிக சொற்ப கணங்களிலே நான் என்பதை கைவிட்டு முழு அறிவுடன் இணைய முடிகிறது கனவுகளில் ( சுசூப்தி) இறப்புக்கு ஒரு கணம் முன்னால் . கோடானுகோடி மூளைகள் கோடானுகோடி ஆண்டுகளாக ஒன்றாக இணைந்து ஒற்றை மூளையென ஆகிவிட்டதாக  இப்போதைக்குப் புரிந்துகொள்ளலாம். பழம் பாறையான ஜட பொருள் மட்டுமல்ல அதனுள் பிரக்ஞையையும் இருக்கிறது.

இரண்டாம் பகுதியில்என்பதே காலத்தில் சற்றே முன்னகர்ந்து  தன்னை இரு இருப்பாக நிலை நிறுத்துகிறது ( அ எனவும் அப்படியே நீடித்து) ச மற்றும் ம ஆக மாறி உடையாடலை தொடர்கிறது. இங்கு நான் சிவவாக்கியரின் முக்கியமான அந்த பாட்டை நினைவு கூர்ந்தேன். Creative evolution அடுத்த நிலையாக மூளைகள் எல்லாம் தன் உடலை விட்டு வெளியே வந்து முற்றிலுமாக உடம்பு என்றும் இருப்பைத் துறந்து மூளைகளாக ஒரு படிவ நிலையில் சேகரிக்கிறது. ஆனால் அப்பொழுதும்  முழு முதல் ஒன்றில் கரைய முடியவில்லை. ஏனென்றால் அதுதான்என்ற நிலையில் பல பிரபஞ்சங்களை உருவாக்கி தான் உருவாக்கிய அந்த பிரபஞ்சத்தோடு இந்த முழுமுதல் பிரபஞ்சத்தை இணைய முற்படுகிறது. அதனாலேயே இந்த மூளை அமைப்பினால் இவ்வளவு தூரம் வர முடிந்திருக்கிறது. சனத் குமாரர்கள் நாரதருக்கு சொன்ன வழியாக முதலில் சொல் என்றும் வாக்காகவும் ஆரம்பித்து கடைசியில் முழு முதல் இருப்பை சென்றடைவது போல,   இங்கு நிகழவில்லை அவர்கள் அந்த ஒலியைஅடையாளங்கள் ஆக்கி சுருக்கி வகுத்து, அதை தனியே நிலை நிறுத்தினர். பிரக்ஞை சேர்க்காத வரை அது தனியாக நிற்கும் ஒரு தனி அறிவாகவே இயங்குகிறது. இந்த  பிரச்சனைகளைதான், இரண்டாம் பாகம் சென்று தொடுகிறது

மூன்றாம் பாகத்தை நான் கிட்டத்தட்ட Carl Sagan Contact வழியாகவே புரிந்து கொள்ள முயல்கிறேன்

கருவிகளின் வழியாக விண்ணுக்கு செலுத்தி வானமென விரிந்த தங்கள் பிரபஞ்சத்தை அறிந்துகொள்ள முயன்றன.அவற்றில் ஒன்றை என் பிரக்ஞை தொட்டது. அந்த உடலை என் பருப்பொருள் தானும் பிரதி எடுத்தது. அதன் வடிவமாக நான் இங்கு அமர்ந்து பேசுகிறேன்

நான்காம் பாகத்தில், இரண்டு பெரும்  பிரபஞ்சங்கள் ஒன்றையொன்று எப்படி அறிய முடியாமல் இருக்கின்றன. அது மற்றொரு பிரபஞ்சம் என்பது தன் அறிதலையே.  

அறிபவை, அறிபடு பொருள், அறிவு மூன்றும் ஒன்றாகிய தருணம். தான் அலையல்ல கடலே தான் என்று  ஆகும் தருணம். கூட்டு மூளையை வெளியில் நின்று பார்த்த”  மீண்டும் பரிணாம சுழற்சியில், முதல் இருப்பிற்கே வருகிறது

Space Odyssey கடைசியில் வரும் தனிமனிதன் ஒருவன் பிரபஞ்ச பிறப்பையே பார்ப்பது போன்றது. ஆனால் அவ்வாறு பார்க்கும் பொழுது தனி மனிதன் என்ற ஒன்று இல்லை பிரபஞ்சமாகவே இருந்து பிரபஞ்சத்தையே பார்ப்பது.

மற்றும் ஒரு Creative Evolution  தொடங்குகிறது.

ஆனந்தோமய அபியாச – 

பிரம்ம சூத்திரத்துக்கு கூறப்பட்டது இந்த கதைக்கும் அதுவே தான். படிக்க படிக்க வெவ்வேறு கோணங்களையும் சாத்தியங்களையும் உருவாக்கித் தருகிறதுகடிதத்தில் ஒருவர்  பழம்பாறை என்பது ஒரு தவளை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.   பாறையாகிய சிவம் எனவும் கொள்ளலாம். நூல்களில் கூறும் பிரம்மமாகவும் எடுத்துக் கொள்ளலாம். Archean Eon உருவான முதல் உயிராகவும் எடுத்துக் கொள்ளலாம்

சாத்தியங்கள் பலவா ராக விரிகின்றன.

கூட்டு முயற்சியில்தான் இந்த கதையையும் முழுதாக தொகுத்துக் கொள்ள முடியும்.

அன்புடன்,

மீனாட்சி

 

பழம்பாறை கதை

முந்தைய கட்டுரைவேதமெய்மை