சென்னையில் பெண் எழுத்துக்காக ஒரு விழா, சனிக்கிழமை காலையில்…

சென்னையில் பெண் எழுத்துக்காக ஒரு விழா

பெண்களின் எழுத்து, கலை

மானசா பதிப்பகம் சென்னையில் பெண்களின் எழுத்து தொடர்பான ஒரு உரையாடல் அரங்கை ஒருங்கிணைக்கிறது.

தேதி: 11 ஜூலை 2026 சனிக்கிழமை

நேரம்: காலை 10 மணி.

இடம்: கவிக்கோ அரங்கம், மயிலாப்பூர்,சென்னை.

இது ஒரு வழக்கமான தமிழ் இலக்கிய விழா அல்ல. இந்திய இலக்கியம், உலக இலக்கியம் சார்ந்த களங்களில் செயல்படும் மூன்று முக்கியமான ஆளுமைகள் கலந்து கொள்கிறார்கள். அவ்வகையில் சென்னையில் நிகழவிருக்கும் மிக அரிய நிகழ்வுகளில் ஒன்று இது.

பத்மா விஸ்வநாதன் தமிழ் விக்கி 

பத்மா விஸ்வநாதன் கனடாவில் பிறந்த அமெரிக்க எழுத்தாளர், முன்னோர் தமிழர்கள். அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க நாவலாசிரியராகக் கருதப்படுகிறார். The Toss of a Lemon, The Ever After of Ashwin Rao, Like Every Form of Love  ஆகியவை அவருடைய புகழ்பெற்ற நாவல்கள்.

கீதா ராமஸ்வாமி தமிழ் விக்கி

கீதா ராமஸ்வாமி இந்திய எழுத்துச் சூழலில் மிகப்பெரிதும் கவனிக்கப்படும் சமூக – இலக்கியச் செயல்பாட்டாளர். இடதுசாரி தீவிர இயக்கங்களுடன் இளமையிலேயே தொடர்பு கொண்டு போராளியாக பல ஆண்டுகள் காடுகளில் வாழ்ந்தவர். அரசால் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர். இன்று மனித உரிமை செயல்பாட்டாளராகவும் இலக்கிய வெளியீட்டாளராகவும் செயல்பட்டு வருகிறார். அவருடைய Land, Guns, Caste, Woman: The Memoir of a Lapsed Revolutionary மிக முக்கியமாக நூலாக விவாதிக்கப்பட்டது.

வைஷ்ணா ராய் இன்று இந்தியாவில் கவனிக்கப்படும் ஊடகவியலாளர். பிரண்ட்லைன் ஆங்கில இதழின் ஆசிரியர், அரசியல் கட்டுரையாளர்.

பத்மா விஸ்வநாதன் ஒரு கீழைநாட்டுப் அகம் கொண்ட பெண் உலக வாசகர்களுக்காக எழுதுவதின் சவால்களை தன் நாவல்களை முன்வைத்து பேசுகிறார். இந்திய அளவில் களச்செயல்பாட்டிலும் அரசியல் செயற்பாட்டிலும் பெண்களின் பங்களிப்பு எத்தகையதாக இருக்க முடியும் என்று கீதா ராமசாமி பேசுகிறார். இந்தியாவின் அரசியல், சமூகவியல் கருத்து உருவாக்கத்தில் பெண்களின் பங்கு என்ன என்பதை பற்றி வைஷ்ணாராய் பேசுகிறார்.

இந்நிகழ்வில் இரண்டு நூல்கள் வெளியிடப்படுகின்றன. அருண்மொழிநங்கையால் தமிழிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறு கதைகளின் தொகுப்பு. ‘A Place of her own’ வெவ்வேறு மொழிபெயர்ப்பாளர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டது

பாரததேவி எழுதிய நிலாக்கள் தூர தூரமாய் என்னும் தன்வரலாற்று நாவலின் ஆங்கிலமொழியாக்கம் சைதன்யாவால் செய்யப்பட்டுள்ளது. சைதன்யா செய்யும் முதல் மொழியாக்கம் இது. Moons Far Far Away!

மானசா பதிப்பகத்தின் அதிகாரப்பூர்வமான தொடக்க விழாவாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். பெண்களுக்கான ஒரு இலக்கிய வெளியை, குறிப்பாக தமிழ்ச் சூழலில் இருந்து செல்லும் படைப்புகளுக்காக, உருவாக்கும் நோக்கம் கொண்ட பதிப்பகம் இது.

நண்பர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.

Register: ‘Women Writing Today’ – event page, Manasa Publications

மானசா பதிப்பகம்

ஜெ.சைதன்யா, கிருபா கிருஷ்ணன்

Those interested can reach out to us by email at connect@manasapublications.com or via WhatsApp at +91 7305567808.
For regular updates on meets and events, please follow our WhatsApp Channel:

Warm regards,

Team Manasa

MANASA PUBLICATIONS P LTD

முந்தைய கட்டுரைவாரம் ஒரு மந்திரம்.