வாரம் ஒரு மந்திரம்.

அன்புள்ள ஜெயமோகன்,

இப்போது மேகங்களின் குரல் என்ற தொடர் வெளிவந்து கொண்டே இருக்கிறது. தொடர்ச்சியாக முழுமை அறிவு சார்பில் நீங்கள் முன்வைத்துக் கொண்டிருக்கும் ஒருங்கிணைந்த வேதாந்த ஞானம் என்பதை நடைமுறையில் எளிய உதாரணங்களுடன், வாழ்க்கை சார்ந்த கதைகளுடன் விளக்கும் அரிய் தொடராக இது உள்ளது. எல்லா வகையிலும் ஓர் முழுமையனுபவம்

வாராவாரம் அதை படிப்பது என்பது ஒரு பெரிய தியானம்.  புதிய மந்திரங்களை தெரிந்து கொள்வதும் ஒரு அதன் வழியாக ஒரு புதிய ஞானத் துளி அடைவதுமாக ஒரு பயணம்

ஒவ்வொரு வாரமும் காத்திருந்து படிப்பது என்பது முப்பதுஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இயல்பாக இருந்திருக்கலாம். இன்று இதை படிக்கும் என் மகளுக்கு பொறுமையில்லை. ஏன் வாராவாரம் எழுதுகிறார் என்று கேட்டாள.  ஆனால் ஒரு வாரம் இதை அசைபோடுவது ஆழ்ந்த புரிதலை அளிக்கும் என்றும தினந்தோறும் இந்த கட்டுரை வந்து கொண்டு இருந்தால் மந்திரங்களை நாம் எளிதில் கடந்து விடுவோம் என்றும் நான் சொன்னேன்.

உங்கள் தளத்திலும் வாரவாரம் இக்கட்டுரைகள வெளிவருது சிறப்பாக இருக்கிறது. ஒரு புத்தகமாக அல்லது ஒவ்வொரு நாளும் வரும் தொடராக இல்லாமல் வாரத்துக்கு ஒரு முறை ஒரு மந்திரம் என்பது சிறப்பான கல்வியாக உள்ளது.

எஸ். ஆர். சித்ரலட்சுமி

முந்தைய கட்டுரைமேலைத்தத்துவ அறிமுக வகுப்புகள்
அடுத்த கட்டுரைசென்னையில் பெண் எழுத்துக்காக ஒரு விழா, சனிக்கிழமை காலையில்…