நாம் கல்விகற்கிறோமா?

ஜெ

இன்று நாம் அடைந்துகொண்டிருப்பது ஒரு தொழில்கல்வி மட்டுமே. அது தொழில்நுட்பத் திறன் மட்டுமே. அது ஒரு தொழிலைச் செய்வதற்கான பயிற்சி மட்டும்தான்; உண்மையான கல்வி அல்ல. பண்பாட்டுக் கல்வியே உண்மையான கல்வி. அது ஒட்டுமொத்தமான கல்வியாக இருக்கும். தொழில்சார் அனுபவத்திற்கான பார்வையை மட்டுமல்ல, வாழ்க்கை அனுபவத்திற்கான பார்வையையும், மரபை அணுகுவதற்கான பார்வையையும் அது அளிக்கும்.

இந்த முழுமையான கல்வி இல்லாததன் குறைபாட்டை இன்று இளைய தலைமுறையினரிடம் நாம் பரவலாகக் காண்கிறோம். அவர்களுக்குப் பண்பாடு என்று அறிமுகமாவது நவீன நுகர்வோர் பண்பாடும் அமெரிக்கக் கேளிக்கைப் பண்பாடும் மட்டுமே. அவற்றைக் கடந்து வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும், மனித அனுபவத்தின் ஆழங்களை அறிந்துகொள்ளவும், கலை இலக்கியங்களின் வழியாகத் தங்களை விரிவுபடுத்திக்கொள்ளவும் தேவையான கல்வியை அவர்கள் பெறுவதில்லை.

இதன் விளைவாக அவர்கள் இளமையில் கேளிக்கைகளில் திளைக்கிறார்கள். தொழில்நுட்ப அறிவை அறிவென்று நினைக்கிறார்கள். நடுவயது கடந்ததும் நேராக சாதி,மத பழமைவாதங்களில் சென்று விழுந்துவிடுகிறார்கள்.

ரா.கிருஷ்ணசாமி

முந்தைய கட்டுரைபண்பாட்டுச் சமநிலைப் பார்வை