முன்னோருக்காக

அன்புள்ள ஜெ,

தங்களின்  “மட்காத மானுட குப்பைகள்” எனும் காணொளி கண்டேன். தமக்கும், குடும்பத்திற்கும் சுற்றத்திற்கும் மட்டுமே செய்வது என்பது வீடுபேறை தராது என்பதை அறிந்து கொண்டேன். அந்த வீடியோவில், முன்னோருக்கு நாம் செய்ய வேண்டியது நீர்க்கடன் மட்டுமல்ல, அவர்களது பெயரை நிலைக்க செய்ய வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டேன். என் தந்தை R. வெங்கடசுப்பிரமணியன் மறைந்து முப்பதாண்டுகள் ஆகப்போகிறது. வருடம் தவறாமல் நீர்க்கடன் செய்கிறேன். அவரது பெயரில் நல்ல காரியங்கள் செய்யலாம் என உங்கள் பேச்சில் இருந்து சிந்திக்க ஆரம்பித்தேன்.

எதற்கு செலவழிப்பது என்ற கேள்வியே எனக்கில்லை. நீங்கள் முன்பே சொன்னது போல, அன்னத்திற்கும், கும்பாபிஷேகத்திற்கும், கல்விக்கும் அளிப்பதை விட ஒரு சொசைட்டி அறிவில் முன்னேற, இலக்கிய நிகழ்வுகளுக்கும், தொடர் கல்விக்கும் செலவு செய்வதே மிகச்சிறந்தது என்பதை நீங்கள் பலமுறை கூறியிருக்கிறீர்கள். அதன்படி, ரூபாய் 30,000த்தை MS Unified Wisdom trustற்கு அனுப்பியிருக்கிறேன்.

இதை இலக்கிய கூடுகைக்கோ, விருதுகளுக்கோ, முழுமையறிவு வகுப்புகளுக்கோ அல்லது அது போன்ற எந்தச் செயல்களுக்காவும் செலவிட கோருகிறேன்.

நன்றி.

Dr. V. Hariharan,

முந்தைய கட்டுரைமுதியவர்கள் அயல்நிலத்தில்