அமெரிக்காவில் தமிழ்

அன்புள்ள ஜெ,

நமது அமெரிக்கக் குழந்தைகள் என்ற ஒரு காணொலி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உங்களால் வெளியிடப்பட்டது. உடனே அதையும் வெட்டி வம்பாக்கி கட்சி சேர்ந்து சிலர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டேன். அந்த வெட்டிவம்பு வழியாகவே நான் உங்களைப் பற்றி அறிந்துகொண்டேன். அந்தக் காணொலியைப் பார்த்தபோதுசரியாகத்தானே சொல்லியிருக்கிறார், இங்கிருக்கும் சிக்கல் தானே?” என்ற எண்ணமே வந்தது. நீங்கள் வழக்கமாகச் சொல்வதுதான். வெறும்வாய்க்கு அவல் தேடி அமர்ந்திருக்கும் கூட்ட. எது கேட்டாலும் உடனே அதை வம்பாக்கி தங்கள் மேல் கொஞ்சம் கவனம் ஈர்க்க முயலும்கூட்டம். 

ஆனால், நீங்கள் ஒன்றைச் சொன்னால் அதை செயல்நோக்கி கொண்டு செல்ல ஆரம்பித்துவிட்டீர்கள் என்பதே பொருள். ஒரு பெருஞ்செயலை கனவுகண்டபடித்தான் ஒரு விமர்சனத்தைச் சொல்கிறீர்கள். தமிழ் விக்கி அமைப்பு உருவாவதற்கு முன்பு நீங்கள் கலைக்களஞ்சியம் பற்றிச் சொன்ன குறைபாடுகள் எல்லாம் அந்தக் குறையை நீக்குவதற்கான பெரும் முயற்சி ஒன்றை நோக்கிச் செல்வதற்காகவே. அந்தக் குறையை தாங்களும் உணர்ந்தவர்களை உங்களுடன் சேர்த்துக்கொள்கிறீர்கள். அந்த குழுவை மெல்லமெல்ல ஓர் இயக்கமாக ஆக்குகிறீர்கள். அமெரிக்காவின் இளைய தலைமுறை பற்றிச் சொன்ன அந்த ஆதங்கம் இன்று இவ்வளவு பெரிய செயலாக ஆகியுள்ளது. இங்கே வம்புகளுடன் மட்டுமே நின்றுவிடுபவர்கள் நடுவே செயல் செயல் என அறைகூவிக்கொண்டே இருக்கிறீர்கள்.

ராஜ் கண்ணன்

முந்தைய கட்டுரைபொதுநலத்தின் வெற்றி.