அன்புள்ள ஜெமோ
உங்கள் காணொளிகளை தொடர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சுருக்கமான காணொளிகள். ஆகவே பல காணொளிகளை நாலைந்துமுறை கேட்க வேண்டியுள்ளது. குறிப்பாக மனிதன் கடவுளைப் படைத்தானா ஓர் அழகான சுருக்கமான உரை. பல திறப்புகளை அளித்தது. கற்காலத் தொல்லியல் முதல் ஆன்மிகம் வரையிலான அந்தக் கோடு ஓர் ஆழமான தரிசனம். ஒரு மகத்தான கவிதை அனுபவம்போலிருந்தது அந்த உரை
மகாதேவன்