மூன்றுநாட்களில் ஓவியம், கடிதம்

அன்புள்ள ஜெ

ஓவியப்பயிற்சி என்பது ஒரு தொழில்நுட்பம். நீண்டகால பயிற்சியால் வரும் திறமை அது. இயல்பாகவே ஓவியம் வரையும் ருசியும் தேவை. அதை ஒரு சிறு சம்மர் கேம்ப் ஆகச் சொல்லிக்கொடுத்துவிட முடியுமா? என் அடிப்படையான ஐயம் இது. ஆகவே தயங்குகிறேன்

ஆர். மாரிமுத்து

அன்புள்ள மாரிமுத்து,

ஓவியத்தை அறிமுகம் செய்வதற்கான பயிற்சிதான் இது. படச்சட்டகம், உருவங்களின் அமைப்பு, வண்ணஒத்திசைவு ஆகிய சில அடிப்படைகளைக் கற்பிக்கிறோம். இது ஓவியம் வரைவதற்கு ஒரு முதல் தொடக்கம். மேற்கொண்டு விரிவாக்கிக்கொள்ளலாம். ஓவியத்தை ரசிப்பதற்கும் ஓவியம் சார்ந்த டிசைன், பேட்டர்ன் முதலியவற்றுக்கு ஒரு கண்பழக்கம் உருவாவதற்கும் ஒரு தொடக்கப்புள்ளி. உண்மையான ருசியும் திறனும் கொண்ட ஒருவர் அவை தனக்கு உள்ளன என்றே தெரியாமல் வாழ்ந்துவிடக்கூடும். இந்த தொடக்கம் வழியாக அவர் அந்த திறமையை தன்னில் அடையாளம் காண வாய்ப்புண்டு. அடிப்படையான திறம் இல்லாதவர்கூட ஓவியங்களை ரசிப்பதெப்படி என அறிந்துகொள்ளக்கூடும்.

ஜெ

முந்தைய கட்டுரைசெய்வதென்ன என்று அறிதல்.
அடுத்த கட்டுரைகடவுளுக்கு அப்பால்