செய்வதென்ன என்று அறிதல்.

அன்புள்ள ஜெயமோகன்

  மலைத் தங்குமிடத்தில்  தியானஉளக்குவிப்புப் பயிற்சி 2023 லிருந்தே நடைபெற்று வருகிறது. ஆனால் எனக்கு ஐம்பது வயதைக் கடக்கும்போதுதான் உடலையும், மனதையும் நல்ல முறையில் வைத்துக் கொள்ள வேண்டுமெனத் தோன்றியது. ஏப்ரல் 17,18,19 இல் நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்டேன். குரு தில்லை செந்தில் பிரபு அவர்கள் மிகுந்த அக்கறையுடனும், புன்சிரிப்புடனும் எங்களுக்குப் பயிற்சி அளித்தார். இப்பயிற்சியின் போதுதான் என்னைப் பற்றிய மூன்று விசயங்களைத் தெரிந்து கொண்டேன்.

1. வஜ்ராசனத்தில் அமர என்னால் இயலவில்லை. பல ஆண்டுகளாக தரையில் அமரவில்லை என்ற உண்மை உரைத்தது.

2.  எனது மனம் அந்த கணத்தில் இல்லாமல் கடந்தகால நினைவுகளிலும், எதிர்கால கனவுகளிலுமே இருக்கிறது என உணர்த்தியது.

3. ஒரேநேரத்தில் பல வேலைகளைச் செய்வது திறமை என தவறான புரிதல் கொண்டிருந்தது.

இவ்வாறான என்னிலிருந்து எனது உடல், மனம் மற்றும் நேரத்தை எனக்கு மீட்டுத் தர இப்பயிற்சியினைத் தினமும் செய்து வருகிறேன்

 உங்களுக்கும்

குரு தில்லை செந்தில் பிரபு அவர்களுக்கும் நன்றிகள்.

மாஹே

முந்தைய கட்டுரைஓவியமும் ஏ.ஐயும்.
அடுத்த கட்டுரைமூன்றுநாட்களில் ஓவியம், கடிதம்