
அன்புள்ள சார்,
இது ஸ்ரீனி. நடந்து முடிந்த உளக்குவிப்பு வகுப்பில் மூன்று நாட்கள் கலந்து கொண்டேன். வாழ்க்கையை மற்றும் விதத்தில் அமைந்தது.
1. முதலாவதாக , இடம். நித்யவானமே பல கற்பிதங்களை தருகிறது. காந்தியின் எளிமையான தோற்றம் மக்களுக்கு எப்படி ஒரு செய்தியாக அமைந்ததோ, நித்தியவனத்தின் எளிமை ஒரு வித தத்துவ எண்ணங்களை ஏற்படுத்துகிறது. செல்போன் சிக்னல் அறவே கிடையாது, எளிமையான கிராமத்து சமையல், அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்ட இருப்பிடம், கூரை மட்டுமே கொண்டு எப்பொழுதும் காற்றோட்டம் அதிகமாக இருக்கும் குரு நித்யா மீட்டிங் ஹால், பக்கத்தில் எந்த கடைகளும் இல்லாமல் இருப்பது, சுற்றி கண்ணுக்கு தெரிந்த இடம் எங்கும் இயற்கை, முற்றிலும் நவீன உலகை விட்டு தனித்து வந்தது போல் இருந்தது. இது எனக்கு நானே கொடுத்த மிக பெரிய வாய்ப்பாக இருந்தது. உளக்குவிப்பு வகுப்பு ஆரம்பிக்கும் முன்பே “தன்னை அறிதல்” தொடங்கிவிட்டதாக தோன்றியது. வகுப்பில் கலந்துகொண்ட சக மாணவர்களிடம் சொன்னேன் “வகுப்புனு வேணாம், சும்மா இந்த இடத்துக்கு வந்துட்டு போனாலே ஒரு தியானம் மாதிரி தான் இருக்கிறது” என்று.

2. இரண்டாவுது, தில்லை செந்தில் பிரபு சார். பல பேருக்கு ஒரு சப்ஜெக்ட்டில் மிகுந்த ஞானம் இருக்கும் ஆனால் கற்பிக்கும் கலை கைகூடி வந்திருக்காது. நான் என்னுடைய பள்ளி பருவத்தில், எனக்கு பிடித்த பாடம் என்று எதுவுமில்லை. எந்த டீச்சர் நன்றாக வகுப்பு எடுக்கிறார்களோ அதுவே எனக்கு பிடித்த பாடமாக இருந்திருக்கிறது. நிறைய மதிப்பெண்கள் வாங்குவதை தாண்டி, அந்த டீச்சர் தனிப்பட்ட வகையில் எனது personality-யில் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார். அதுபோல் ஒருவர் தான் தில்லை செந்தில் பிரபு சார். மனிதர் மூன்று நாட்களில் ஒரு நிமிடம் கூட கடமை என்று கழிக்கவில்லை. ஒரு சொல்ல கூட சலிப்பாக பேசவில்லை. ஒரு முறை கூட பேசும் பொழுது தடுமாற்றம் இல்லை. இத்தனைக்கும் நினைவு படுத்திக்கொள்ள, எந்த ஒரு குறிப்புகளும் அவர் பயன்படுத்தவில்லை. மனதில் இருந்து பேசுகிறார். அவரிடம் அத்தனை எனர்ஜி, உற்சாகம். எல்லோருக்கும் கற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்கிற வேட்கை. 50 பேரும் தன் பார்வையில் தெரியவேண்டும் என்று எங்களை அதற்கேற்ப உட்கார சொல்லுவார். வகுப்பு நடுவில் யாரேனும் கவன சிதறலில் இருத்தல் உடனே சுட்டி காட்டி கவனிக்க வைப்பார். எல்லோரையும் சமமாக நடத்தினர். பொறுமையாக கேள்விகளுக்கு பதிலளித்தார். உளக்குவிப்பு, தியானம் போன்ற dry சப்ஜெக்டை, கொஞ்சம் கூட சலிப்பு ஏற்படாத வகையில் கற்பித்தார். நடுநடுவே ஹுமர் செய்து வகுப்பை உயிர்ப்புடன் கொண்டு சென்றார். மனிதருக்கும் கற்பிக்கும் வித்தை முழுமையாக கைவந்த கலையாக இருக்கிறது. மிக முக்கியமாக தான் கற்பிப்பதை போல் தானே இருக்கிறார். அவரே சமையல் அறைக்கு சென்று சுடுதண்ணி போட்டுக்கொண்டது, அனைவரும் சாப்பிட்ட பிறகு சாப்பிடுவது, வகுப்புக்கு தான் சொன்ன நேரத்துக்கு முன்கூட்டியே வருவது, சனிக்கிழமை இரவு எல்லோருடனும் சேர்ந்து சினிமா பாடலை உற்சாகமா பாடியது வரை. Living that moment to the fullest. அந்தந்த இடத்தில் அதை ரசித்து நடந்துகொள்கிறார். Inspiring Teacher.

3. மூன்றாவுது, வகுப்புகள் அமைத்திரும் நோக்கம் மற்றும் முறை. online இல்லாமல், வீடியோ record செய்யாமல், துளியும் சந்தை படுத்தல் இல்லாமல், குருகுல கல்வி போல் அனேகமாக அணைத்து வகுப்புகளும் மிக நேர்மையான நோக்கத்தில் திட்டமிடப்பட்டிருக்கிறது. அறிவை தேடி வருபவர்கள் மட்டும் வந்தாலே போதும் என்ற நிலைப்பாடு மிக முக்கியமானது. அசோகமித்திரனின் “குகை ஓவியங்கள்” சிறுகதையில் வருவது போல். சாதகமில்லாத சூழ்நிலை, கடினமான மலையேற்றம், இத்தனை சிரமத்தையும் தாண்டி பயணித்தவர்களுக்கே குகை ஓவிங்கள் காட்சி அளிக்கின்றன. கதாநாயகன் ஓவியத்தின் தத்துவத்தை அறிந்து அதன் மூலம் ஒரு ஞானம் பெறுகிறான். அதே போல் இங்கே அறிவு தேர்தெடுத்த நபர்களுக்கே வழங்கப்படுகிறது. வெள்ளிமலை பயணம், அடிப்படை வசதியில் தங்கி கற்ற வேண்டும் என்கிற அமைப்பு, பலரை filter செய்துவிடுகிறது. Most deserved மட்டுமே இத்தகைய அறிவை பெறுவதே கற்றுக்கொடுக்கபடுவதின் பயன் என்ற நோக்கம் மிகச் சரியானதாக தோன்றுகிறது.
4. நான்காவதாக, கலந்துகொண்டவர் அனைவருமே sincere ஆக இருந்தார்கள். கட்டுப்பாடுடன், மிகுந்த பொறுப்புடன் செயல்பட்டார்கள். காலை 6:45 வகுப்பு என்றால் கூட அனைவரும் 10-15 நிமிடம் முன்பே வந்து விட்டனர். No late comers at all. ஒருவர் கூட எந்த session-ம் தவிறக்கவில்லை. ஒரு வகுப்பு முடிந்த பிறகு “தியானம் முடிந்திருப்பதால் சாப்பிடும் போதும் அடுத்த நான்கு மணிநேரம் நீங்கள் தனித்திருங்கள், யாருடனும் eye contact, பேச்சு வைத்து கொள்ளாதீர்கள், இயற்கையோடு இருங்கள், உங்களை கவனியுங்கள்” என்று தில்லை செந்தில் சார் சொன்னார். அனைவரும் சொன்னதை அப்படியே follow செய்தனர். மற்றவரின் ஒழுக்கமே ஒவ்வொருவருக்கும் அறிவு தேடலுக்கு motivation ஆக இருந்தது.
5. இறுதியாக, உளக்குவிப்புகாக சென்று இருந்த எனக்கு இந்த மூன்று நாட்கள் முக்கியமானது. என்னை என் மனதை, என் மூச்சு காற்றை, என் உடல் அசைவுகளை, என் எண்ணங்களை, என் உள் சக்தியை, என் உணர்வுகளை கண்களை மூடி கவனித்தேன். நம்மை கவனிப்பதின் மூலம், செய்யும் வேளையில் கவன குவிப்பை நிகழ்த்தலாம் என்று புரிந்து கொண்டேன். தொடர்ந்து கற்ற பயிற்சிகளை வாழ்வில் செயல்படுத்துவேன். வாய்ப்பிற்கு நன்றி.
இப்படிக்கு,
ஸ்ரீனி











