
வணக்கம்:! கடந்த வாரம், August 21, 22, 23, தேதிகளில் நிகழ்ந்த உருது மொழி இலக்கிய வகுப்பில் கலந்து கொண்டு மகிழ்ந்தேன். உருது மொழி என்றால், கஜல் பாடல்கள், வட இந்தியாவில் ஏழை, எளிய முஸ்லிம் மக்கள் பேசும் மொழி என்ற அளவில் தான் உருது மொழி பற்றிய எனது புரிதல் இருந்தது.பேராசிரியர் Faiz Qadri அவர்கள் உருது மொழியின் வேர் மொழிகளான அரபி, பாரசீக மொழி அறிமுகம், சமஸ்கிருதம், ஆங்கிலம் மற்றும் பல மொழிகளில் இருந்து பெற்ற வளர்ச்சிக் கூறுகள், உருது மொழியின் நவீன உருவாக்கம், உருது மொழிக் கல்வி நிறுவனங்கள், அவற்றின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும் என,இவை அனைத்தைuம் ஒரு கால ஒழுக்கான வரிச் சித்திரமாக வார்த்து எடுத்தார்.உருது கவிதை வகைகள், செய்யுள் இலக்கணங்கள் , உரை, நாடகம், பகடி என அனைத்து இலக்கிய வடிவங்கள் பற்றியும் விரிவான புரிதல் ஏற்படுத்தினார்.

அவரது தமிழ் கையெழுத்தின் கம்பீர அழகு, அவரது உருது மொழி flowing calligraphy ( permanent Black flowers on paper ) எங்கள் கண்ணுக்குள், கருத்துக்குள் நிற்கும் . ( “சாரே ஜஹான் சே அச்ச்சா ஏ இந்துஸ்தான் ஹை ஹமாரா” என்ற நீண்ட கவிதை வரியை ஒரு சிறு சித்திர வரியாக காட்டியது பெரிய அற்புதம்.)
அவரது குரலின் இனிமை எங்கள் காதுக்குள், நெஞ்சுக்குள் இருக்கும். உருது மொழி கவிஞர்கள், பாடல் ஆசிரியர்கள், பாடகர்கள், இசை மேதைகள்,உருது மொழி சார்ந்த அரசியல், சமூக ஆளுமைகள், கல்வியாளர்கள்இவர்களின் வாழ்க்கைச் சித்திரங்கள், அவர்களது தனிப்பட்ட வாழ்வின் சோக நிகழ்வுகள் இவற்றையெல்லாம் நாம் அறிந்து கொள்ள, ஆற்றொழுக்காக, இனிமையாக சொல்லிக் கொண்டே வந்தார் நம் ஆசிரியர்.

இனிய அனுபவம். எங்களுக்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ள, தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ள, உருது மொழி இலக்கிய வாசிப்பு, திரைப்பட பார்வை அனுபவம்,பாடல் கச்சேரிகள், இன்ன பிறவும் என , எங்கள் மனதை விரிவாக்கும் என்று நம்புகிறோம். உருது மொழி இசையையும் புரிதலோடு செவி மடுப்போம்.
இது நாள் வரை உருது என்றால் இஸ்லாமிய மக்கள் படைப்புதான் என்று இருந்த எனக்கு, பிரேம் சந்த் அவர்களின் உருது படைப்புகள் குறித்த அருமையான தகவல்கள் கிடைத்தன. பெரிய ஆச்சரியம் !! மொத்தத்தில், இது ஒரு memorable, cherishable முழுமையறிவு நிகழ்வு.ஆசிரியர் மட்டும் அல்ல, மாணவர்களும் ( படைப்பாளிகள், மொழி பெயர்ப்பாளர்கள் ) ஏராளமான உருது மொழி இலக்கியம் & இசை பற்றிய தகவல்கள் பலவற்றை தொடர்ந்து பகிர்ந்து கொண்டது மேலும் இனிமை சேர்த்தது.
சுக்ரியா !
இரா. சி. தனசேகர்






