நூலக ஊழலும் செயற்கை நுண்ணறிவும்

ஜெ

செயற்கை நுண்ணறிவு பற்றிய ஆர்வம் இன்று பெருமளவில் உருவாகி வருவதை அறிந்துகொண்டேன். செயற்கை நுண்ணறிவை முறையாகக் கற்றுக்கொள்வது இன்று பல வகைகளில் முக்கியமானது. செயற்கை நுண்ணறிவைச் சரியாகக் கையாளத் தெரியாமல், அதன் பெயரால் பலர் செய்யும் கோமாளித்தனங்களைத்தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேட்டில், பைத்தியக்காரத்தனமான மொழிநடையில் புத்தகங்களை உருவாக்கி அச்சிட்டு, அவற்றை நூலகங்களுக்கு வழங்கி அரசுப் பணத்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம் இனிமேலாவது பிழையில்லாத புத்தகங்களை உருவாக்கும் அளவுக்காவது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

ராம்

முந்தைய கட்டுரைகாடு, ஆலயம், கலை