பறவை பார்த்தல் வகுப்புகள்

 

 

முழுமையறிவு சார்பில் பறவைபார்த்தல் வகுப்புகள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன. திரளாகச் சிறுவர்கள் கலந்துகொள்கிறார்கள். இன்றைய குழந்தைகளை இணைய- செல்பேசி மோகத்தில் இருந்து வெளியே கொண்டு வர நேரடியான களம்சார்ந்த பயிற்சிகளால் மட்டுமே முடிகிறது. அத்துடன் இன்றைய சுமையான படிப்பில் இருந்து மெய்யான இடைவேளையையும் இளைப்பாறுதலையும் அதுவே அளிக்கிறது. ஆகவேதான் உலகம் முழுக்க இவை நிகழ்கின்றன. எங்கள் முயற்சிகளிலுள்ள பெரும் வெற்றியும் அதையே நிரூபிக்கிறது.

பறவைபார்த்தல் என்பது இயற்கையுடன் ஓர் அறிமுகத்தை உருவாக்கிக் கொள்ளுதல். இயற்கையில் இணைந்து பொறுமையுடன் இருப்பதற்கான பயிற்சி. ஒன்றை நீண்டநேரம் கூர்ந்து கவனிப்பதற்கான பயிற்சியும்கூட. ஆகவே பெரியவர்களுக்கும் அது ஒருவகை தியானமே.

நாள் ஜனவரி 16 17 மற்றும் 18

contact [email protected]

அறிவிக்கப்பட்ட வகுப்புகள் இடமிருப்பவை

சிந்தனைப் பயிற்சிக் கல்வி- கடிதம்

ஈரோடு நண்பர் கிருஷ்ணன் வழக்கறிஞராக புகழ்பெற்றவர்முற்றிலும் சட்டம் சார்ந்தே வழக்குகளை நடத்துபவர்சட்ட அறிஞர் என அறியப்பட்டவர்இருபத்தைந்தாண்டுகாலமாக தர்க்கவியல்தத்துவம் ஆகியவற்றிலும் இலக்கியத்திலும் தீவிர ஆர்வத்துடன் ஈடுபட்டு வருபவர்ஈரோட்டை மையமாக்கி அவர் நடத்திவரும் அறக்கல்வி இயக்கம் மாணவர்களிடையே தர்க்கபூர்வச் சிந்தனையைஅறிவியல்நோக்கை உருவாக்குவதில் பெரும் பங்களிப்பாற்றி வருகிறது.

கிருஷ்ணன் சென்ற நவம்பரில் நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பெங்களூரில் தர்க்கபூர்வ வாசிப்பு– சிந்தனை ஆகியவற்றை பயிற்றுவிப்பதற்காக ஒருநாள் வகுப்பை நடத்தினார்அது பங்கேற்றவர்கள் நடுவே மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றதுஅவ்வகுப்பை விரிவாக அவர் நடத்தவேண்டும் என நண்பர்கள் விரும்பியதனால் அதுவே மூன்றுநாள் வகுப்பாக விரிவாகபுதிய தளங்களுடன் நடத்தப்படவுள்ளது.

இந்த வகுப்பில் தர்க்கபூர்வமாக சிந்தனைகளை தொகுத்துக்கொள்வதுதர்க்கபூர்வமாக விவாதிப்பதுநாம் வாசிக்கும் செய்திகளை அடிப்படை தர்க்கம் சார்ந்து புரிந்து நம்முள் அமைத்துக்கொள்வது ஆகியவை நவீன தத்துவம்– சட்டம் ஆகியவற்றுடன் இணைத்து செய்முறைப் பயிற்சிகளுடன் கற்பிக்கப்படும்.

இந்தியக் கல்விமுறையில் நமக்கு கற்பிக்கப்படாத ஒன்று தர்க்கபூர்வ சிந்தனைஅறிவியல் தர்க்கம்தத்துவத்தர்க்கம் என இரண்டு உண்டுஇவ்விரண்டுமே நாம் கற்கும் அனைத்தையும் புரிந்துகொண்டுநமக்குள் தொகுத்துக்கொண்டுநமது சிந்தனையாக ஆக்கிக்கொள்ள நமக்கு உதவுபவைபல்வேறு தரவுகள் ஒரு சிந்தனைப்போக்காக ஆவது தர்க்கத்தாலேயேதர்க்கம் இல்லையென்றால் அவை இணையாமல் உதிரிச்செய்திகளாகவே இருக்கும்.

நம் சூழலில் பெரும்பாலானவர்கள் வெறும் தகவல்களையே சொல்லிக்கொண்டிருப்பதும்தகவல்பிழைகளை சுட்டிக்காட்டுவதை மட்டுமே தர்க்கமாக முன்வைப்பதும் தர்க்கசிந்தனை இல்லாத காரணத்தால்தான்நம் கல்விமுறையே தகவல்களை அறிந்துகொள்ளுதல் என்னும் அளவிலேயே உள்ளது என்பதுதான் அடிப்படைக் காரணம்தர்க்கபூர்வமாக அடுக்கிக்க்கொண்டு சிந்தனையாக ஆக்கப்படாத தகவல்கள் அடிப்படையில் பயனற்றவைவிரைவில் மறந்துவிடக்கூடியவை.

தர்க்கபூர்வச் சிந்தனை என்பது நம் சிந்தனையை நாமே உருவாக்கநாம் வாசிப்பவற்றை புரிந்துகொண்டு நினைவில்கொள்ள மிக அவசியமானதுஇந்த வகுப்பு அதற்கான பயிற்சி.

நம் சூழலில் இன்று சட்டமே முழுக்கமுழுக்க தர்க்கம் சார்ந்த ஒன்றாக உள்ளதுபொதுவாக நாம் சட்டம் செயல்படும் முறையை அறிந்துகொள்வதில்லைஏனென்றால் நாம் நீதிமன்றம் செல்லவேண்டியதில்லையே என நினைக்கிறோம்ஆனால் நம் அன்றாட வாழ்வில்நம் அலுவலகச் செயல்பாடுகளில்நம் வணிகத்தில் சட்டரீதியான நடைமுறையையும் அது சார்ந்த சிக்கல்களையும் சந்தித்துக்கொண்டே இருக்கிறோம்.சட்டம் செயல்படும் தர்க்கமுறையையும்அதன் அடிப்படைகளை அறிந்துகொள்வது அபாரமான தெளிவை அளிக்கும் ஒரு கல்வி.

தர்க்கபூர்வ அறிதல் என்பது நடைமுறை சார்ந்து கற்கையில் எத்தனை சுவாரசியமானது என அறிவது நம் சிந்தனையில் ஒரு திருப்புமுனையாக அமையக்கூடியது.

நிகழ்வுநாட்கள்

ஜனவரி 9, 10 மற்றும் 11 (வெள்ளி சனி ஞாயிறு)

For contact [email protected]

 

வரவிருக்கும் வகுப்புகள்

 

வைணவ இலக்கிய அறிமுக வகுப்புகள்

ராஜகோபாலன் நடத்தும் வைணவ இலக்கிய வகுப்புகள் வைணவதத்துவம், வைணவ வரலாறு, தமிழிலக்கிய மரபு ஆகியவற்றுடன் இணைத்து வைணவ இலக்கியமாகிய நாலாயிர திவ்யபிரபந்தத்தை புரிந்துகொள்வதற்கான அறிமுகமாக அமைபவை. தமிழிலக்கியத்திலும், தமிழ் வரலாற்றிலும் ஆர்வமுள்ள எவருக்கும் அவசியமான அடிப்படைப் பயிற்சிகள் அவை. பலமுறை பல வாசகர்களின் தீவிர ஈடுபாட்டுடன் நிகழ்ந்த அப்பயிற்சிகள் மீண்டும் நிகழவுள்ளன.

நாள் ஜனவரி 23 ,24 மற்றும் 25

For contact [email protected]

தில்லை செந்தில்பிரபு நடத்தும் தியானம்- கவனக்குவிப்புப் பயிற்சி வகுப்புகள் இன்று மிகவும் புகழ்பெற்றுள்ளன. அவை தொடங்கப்பட்டபோது அவற்றின் நடைமுறைப் பயன் என்பது கவனக்குவிப்பாக இருக்கும் என எண்ணியிருக்கவில்லை. இன்றைய அன்றாடவாழ்க்கையில், கல்வியில் கவனச்சிதறல் மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ள நிலையில் இப்பயிற்சிகள் மிகச்சிறந்த தீர்வை அளிப்பதை பங்கேற்பாளர்களிடமிருந்தே கற்றுக்கொண்டு அதற்கேற்ப இப்பயிற்சிகள் மேம்படுத்தப்பட்டன. கவனச்சிதறலின் உடனடி விளைவு சீரான துயிலின்மை. துயிலின்மை எதையும் ஒருங்கிணைந்த உள்ளத்துடன் செய்ய முடியாமலாக்குகிறது. இந்த தியானமுறைகள் அதற்கு மிக உகந்தவை
தில்லை செந்தில் பிரபு அவருடைய ஆனந்த சைதன்யா அறக்கட்டளை வழியாக இப்பயிற்சிகளை எளியநிலை கல்லூரி மாணவர்களிடையே மிகப்பெரிய அளவில் இப்போது கொண்டுசெல்கிறார்.
மீண்டும் வகுப்புகள்
நாட்கள் ஜனவரி 30 31 மற்றும் பெப்ருவரி 1
முந்தைய கட்டுரைவைணவ வகுப்புகள் எதைப்பற்றி…