பொதுநலத்தின் வெற்றி.

Screenshot

அன்புள்ள ஜெயமோகன்,

உலகம் பெரும்போரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் வரும் செய்திகள் சோர்வளிக்கின்றன. நீங்கள் வாழும்தமிழ் இலக்கிய விழாவை தொடங்கும் போது அமெரிக்கா விசா சம்பந்தமான கெடுபிடிகளைத் தொடங்கி விட்டது .உங்களுக்கு மிகப்பெரிய அளவில் நிதியாதாரமும் அமைப்பு சார்ந்த ஆதரவும் இல்லை. எண்ணிப் பார்க்கையில் எத்தனை பெரிய தடைகள் என்று தெரிகிறது .ஒவ்வொரு தடையை மீறி இந்த அமைப்பை முன்னெடுத்து இந்நிகழ்வை நோக்கி சென்று கொண்டிருக்கும் பொறுமையும் துணிவும் பாராட்டத்தக்கது. உங்கள் நண்பர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ளுங்கள்.

அரசு மாணிக்கவாசகம்

அன்புள்ள மாணிக்கவாசகம்,

என் நண்பர்கள் எந்த வகையிலும் தங்களுடைய சுயநலத்தை முன்வைக்காமல் இலக்கியம் என்ற அறிவியக்கத்தின், லட்சியவாதத்தின் அடிப்படையில் செயல்படுகிறார்கள். ஆகவே அவர்கள் நம்பிக்கை இழப்பதில்லை .செயலூக்கம குறைவதும் இல்லை.

சுயநலம் சார்ந்த செயல்பாடுகளில் இருக்கும் நம்பிக்கைவீழ்ச்சியும் சோர்வும் லட்சியவாதச் செயல்பாடுகளில் ஒருபோதும் இருப்பதில்லை .தமிழ் எழுத்தாளர்களை இவ்வளவு உழைப்பும் பணமும் செலவிட்டு அங்கு கொண்டு சென்று அறிமுகப்படுத்தும் இந்த நண்பர்கள் எவரும் எழுத்தாளர்களோ இலக்கியத்தின் வழியாக எந்த வகையிலும் வெளிச்சம் பெறுபவர்களோ அல்ல . அந்த தியாகத்தின் ஆற்றலே இந்நிகழ்வின் வெற்றி

ஜெ

முந்தைய கட்டுரைமேன்மக்களும் கீழ்மக்களும்.