அன்புள்ள ஜெயமோகன்,
இயற்கையில் வாழ்வது பற்றிய உங்கள் பேச்சைக் கேட்டேன். இயற்கையை உண்மையாக அனுபவிப்பது என்பது அனைவருக்கும் இயல்பாக அமைந்துவிடுவதில்லை. அதற்குக் கற்பனைத்திறன் வேண்டும். அத்தகைய கற்பனைத்திறன் கொண்டவர்கள் சமூகத்தின் முக்கியமான உறுப்பினர்கள். அவர்களே அறிவுஜீவிகள்.
ஆனால், கல்வியும் கற்பனையும் அற்றவர்களே பெரும்பான்மையாக உள்ள நம் நாட்டில், இந்தச் சிறுபான்மையினரின் நலன்களும் அவர்களின் பார்வையும் பேணப்படுவதில்லை. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அறிவுஜீவிகளுக்கு சமூகத்தில் அளிக்கப்படும் முக்கியத்துவம் நம் நாட்டில் இல்லை. இதுவே அமெரிக்காவுக்கும் நமக்குமான அடிப்படையான வேறுபாடு என்று நினைக்கிறேன்.
அன்புடன்,
ராஜ் கண்ணன்









