
அன்புள்ள ஜெயமோகன்,
நான் ஒரு பெண்ணாக எப்போதும் தனிமையை உணர்ந்திருக்கிறேன். எனக்கான அறிவுவெளி ஒருபோதும் கிடைத்ததில்லை. அதற்காக நான் ஆசைப்படுவதுகூட அத்துமீறலாகவே என் குடும்பத்தில் கருதப்படுகிறது.
ஒரு பெண் தான் பிறந்த குடும்பத்தையும் புகுந்த குடும்பத்தையும் கைவிடாமல், இங்கே தனது அறிவுப் பயணத்தைத் தொடர முடியாத நிலையே உள்ளது.
நீங்கள் பெண்களுக்காக வகுப்புகள் நடத்தும்போது, பெண்களுக்கு அறிவைத் தேடுவதற்கான சுதந்திரம் இந்தியச் சமூகத்தில் இன்னும் முழுமையாக இல்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
அன்புடன்,
எஸ்.










