யோகக்கொண்டாட்டம்
மே 17 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் குரு சௌந்தர் நடத்தும் யோகப்பயிற்சி. இப்பயிற்சி இதுவரை யோகப்பயிற்சி பெற்ற அனைவரும் வந்துகூடுவதற்கானது. ஒரு பொதுக்கூடுகை மற்றும் பயிற்சி இது. இதுவரை பயிற்சி எடுத்துக்கொண்டவர்களின் பயிற்சிநிலை, அதன் தொடர்ச்சி ஆகியவற்றை ஆசிரியர் பரிசீலிப்பார். முதல்முறை வருபவர்களும் கலந்துகொள்ளலாம்
ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு [email protected]
எங்கள் இணையப்பக்கம் முழுமையறிவு
முகநூலில் தொடர
================================================
முந்தைய வகுப்புகள், இடமிருப்பவை
சைவத் திருமுறைப் பயிற்சி
சைவ அறிஞரும், பேச்சாளருமான மரபின்மைந்தன் முத்தையா நடத்தும் சைவத் திருமுறைகளை அறிவதற்கும் உணர்வதற்குமான பயிற்சி வரும் மே மாதம் முதல்வாரம் 3,4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நிகழும். ஏற்கனவே நிகழ்ந்த பயிற்சி பங்கேற்பாளர்களுக்கு பெரிய அறிவனுபவமாகவும் உணர்வனுபவமாகவும் இருந்தது என்றனர்.
மரபின் மைந்தன் முத்தையா திருவாவடுதுறை ஆதீன வித்வான். மரபான முறையில் தமிழிலக்கியம் பயின்றவர். திருக்கடையூர் ஆலயத்தின் பரம்பரை அறங்காவலர் மரபில் வந்தவர்.
சைவத்திருமுறைகள் பக்தி- தத்துவம் ஆகியவை கொண்ட தமிழ் தொல்நூல்கள். அவற்றை உணர்வுரீதியாக பயில்வதற்கான வழிகாட்டிப் பயிற்சி இது. ஆனால் சமயச்சார்பு அற்றது. அவற்றை இலக்கியமாக அணுக விரும்புபவர்களும் பங்கெடுக்கலாம். அனைத்து மதத்தினரும் பங்கெடுக்கலாம். நவீன இலக்கிய வாசிப்பும், நவீனச் சிந்தனைகளில் பயிற்சியும் கொண்ட ஆசிரியரால் இளைய வாசகர்களுக்காக நடத்தப்படுவது
ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு [email protected]
உளக்குவிப்புப் பயிற்சி
மே மாதம் 7,8 தேதிகளில் ( செவ்வாய் புதன் இரண்டு நாட்கள்) இளைஞர்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு உதவும் கவனக்குவிப்பு- ஊழ்கப்பயிற்சி. ஏற்கனவே நிகழ்ந்த 3 நாள் பயிற்சிகள் மாணவர்களுக்காக இரண்டுநாட்கள் நடத்தப்படுகின்றன.
15 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளலாம்.
புகழ்பெற்ற உளப்பயிற்சி நிபுணர் தில்லை செந்தில் பிரபு நடத்துகிறார். தில்லை செந்தில் பிரபு தமிழகத்தின் புகழ்பெற்ற ஆன்மிக அமைப்பு ஒன்றில் நீண்டகாலம் முழுநேரப் பயிற்சியாளராக இருந்தவர்.
தில்லை செந்தில் பிரபு பொறியாளர். Asst. General Manager ,Mak Controls and Systems Pvt Ltd ஆக இருந்தவர் இப்போது Vice President , MAK Controls & Systems Pvt. Ltd, Coimbatore. ஆக பணியாற்றுகிறார். ஏழை மாணவர்களின் கல்விக்காக ANANDA CHAITANYA FOUNDATION எனும் அமைப்பை நடத்தி வருகிறார்
இன்றைய வாழ்க்கையில் நம் உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி ஒன்றில் நிலைக்கவிடும் பயிற்சியை முறையாக அடைந்தே தீரவேண்டும். படிப்பு, பணி இரண்டுக்கும் மிக இன்றியமையாதது இப்பயிற்சி. பல தொழில்நிறுவனங்களும் கல்விநிறுவனங்களும் சர்வதேச அளவில் இவற்றை தங்கள் ஊழியர்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் நிகழ்த்திவருகின்றன
ஏனென்றால் நாம் இன்று பலதிசைகளில் கவனம் சிதறடிக்கப் படுகிறோம். தொடர்ச்சியாக குறைந்தது ஒருமணிநேரம் ஒரு செயலை செய்ய நம்மால் முடியுமா என்பதுதான் இந்நூற்றாண்டின் சவால். செய்ய முடிபவர்கள் மட்டுமே வெல்கிறார்கள்
இப்பயிற்சியை அடைந்து, தொடர்ந்து செய்பவர்கள் அந்த பெரும் வேறுபாட்டை உணரமுடியும்.
ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்
ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு [email protected]
- யோகமும் தியானமும் எதற்காக?
- தியானமுகாம், தில்லை – கடிதம்
- வரும் நாளை
- யோகமும் தியானமும் எதற்காக?
ஆலயக்கலைப் பயிற்சிகள்
மே மாதம் 10, 11 மற்றும் 12 தேதிகளில் ஜெயக்குமார் பரத்வாஜ் நடத்தும் ஆலயக்கலைப் பயிற்சி நிகழ்கிறது.
ஒவ்வொரு முறையும் மிகுந்த எண்ணிக்கையில் பங்கேற்பாளர்கள் கலந்துகொள்வது ஆலயக்கலைப் பயிற்சிக்குத்தான். அதற்குக் காரணம் ஆலயங்கள் மேல் பேரார்வம் இருந்தும் அவற்றை பார்த்தறியமுடியாத அளவுக்கு நம்மிடம் மரபுசார்ந்த அறிவு இல்லாமை உள்ளது. ஒரு சிறு பயிற்சியே பெரும் தொடக்கமாக ஆகிவிடுகிறது. முழு வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது.
இந்தப் பயிற்சிகளில் கலந்துகொண்டவர்கள் தொடர்ச்சியாக ஆலயங்களுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். ஜெயக்குமார் தாராசுரம், ஹம்பி, அஜந்தா என அவர்களை வழிநடத்திக்கொண்டு பல ஊர்களுக்கு கல்விப் பயணங்களை ஒருங்கிணைத்துள்ளார்.
இப்பயிற்சிக்குப் பின் அடுத்தகட்ட பயிற்சியாக ஓர் ஆலயத்தை முழுமையாக பார்த்து ஆவணப்படுத்தி ஒரு நூலாக எழுதுவதற்கான பயிற்சிகளை இப்பயிற்சிகளில் கலந்துகொண்ட ஆர்வமுள்ள வாசகர்களுக்கு அளிக்க எண்ணுகிறோம்.
ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு [email protected]
வரவிருக்கும் நிகழ்ச்சிகள்
குருநித்யா காவிய அரங்கு
மே 24 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் ஆண்டுதோறும் நிகழும் குருநித்யா இலக்கிய விழா. இது ஆண்டுதோறும் நிகழும் இலக்கிய மாநாடு. நாவல், சிறுகதை, கவிதை ஆகிய களங்களில் வாசகர் பங்கேற்புடன் விவாதங்கள் நிகழும்.
ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு [email protected]
ஆயுர்வேத வகுப்புகள்
சுனீல் கிருஷ்ணன் காரைக்குடியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர். புகழ்பெற்ற எழுத்தாளர். ஆயுர்வேத முறைகளை பொதுவாசகர்களுக்கு அறிமுகம் செய்து அவர் நடத்திய இரண்டு வகுப்புகள் பலருக்கும் மிக உதவியானவையாக இருந்தன.
ஆயுர்வேதம் ஏன் அறிமுகம் செய்துகொள்ளப்படவேண்டும்? நவீன மருத்துவம் நம் உடற்கூறு, நோய்கள், மருத்துவம் ஆகியவற்றை அறிமுகம் செய்கிறது. ஆனால் ஆயுர்வேதம்தான் நம் வாழ்க்கைமுறையை நாம் புரிந்துகொள்ள உதவுகிறது. நம் உணவுமுறை, நம் சூழல் ஆகியவை ஆயுர்வேதத்துக்குத்தான் அணுக்கமானவை. இவற்றைப் பற்றி நாம் ஏராளமான செவிவழிச்செய்திகளை அறிந்து பலவகையான பிழையான புரிதல்களைக் கொண்டிருப்போம். உண்மைநிலையை அறிய ஆயுர்வேதத்தின் அடிப்படைகளை அறியவேண்டும். எளிய முறையில் அதை கற்பிக்கும் நிகழ்வு இது
வரும் மே 31 ஜூன் 1, 2 தேதிகளில் இவ்வகுப்புகள் நிகழும்
ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு [email protected]
சைவசித்தாந்த வகுப்புகள்
சைவத்திருமுறை வகுப்புகளை மரபின்மைந்தன் முத்தையா நடத்திவருவதைப்போல நவீன வாசகர்களுக்காக சைவசித்தாந்த தத்துவத்தை அறிமுகம் செய்ய ஆசிரியர் ஒருவரை தேடிக்கொண்டிருந்தோம். வகுப்பு நடத்த ஒப்புக்கொண்டுள்ள முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள் சைவ அறிஞர், தத்துவ ஆய்வாளர். சுந்தரமூர்த்தி சுவாமிகள், குமரகுருபரர் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்
நிகழ்வு ஜூன் 8, 9 மற்றும் 10 தேதிகளில் நிகழும்
ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு [email protected]
இந்திய தத்துவ முகாம் நான்காம் நிலை
ஜூன் 14 15 16 தேதிகளில் இந்திய தத்துவ அறிமுகம் நான்காம் நிலை நிகழும். முதல் மூன்றுநிலைகளில் பங்கெடுத்தவர்களுக்காக மட்டும். ( ஏப்ரல் 26 27 28 தேதிகளில் மூன்றாம் நிலை பயிற்சிககள் நிகழ்கின்றன)
ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு [email protected]
பைபிள் அறிமுக வகுப்புகள்
முறைப்படி கிறிஸ்தவ இறையியல் பயின்றவரான நண்பர் சிறில் அலெக்ஸ் நடத்திய முந்தைய பைபிள் வகுப்பு ஒரு பேரனுபவமாக இருந்தது என்று பங்கெடுத்தவர்கள் பலர் சொன்னார்கள். பைபிள் நவீன வாசகர்களுக்காக அதன் ஆன்மிகத்தையும் அழகியலையும் முன்னிறுத்தி இவ்வாறு கற்பிக்கப்படும் இன்னொரு இடம் இல்லை.
பைபிள் நவீன ஐரோப்பியக் கலையை அறிய, நவீன ஐரோப்பிய இலக்கியத்தை அறிய மிக முக்கியமான வரலாற்றுப் பண்பாட்டு ஆவணம். அதை எப்படி அணுகுவது என அறிமுகம் செய்யும் வகுப்பு இது.
அத்துடன் ஆன்மிகமாக பைபிளைச் சென்றடைவது ஓர் ஆழ்ந்த பயணம். இது மதக்கல்வி அல்ல. இதனுடன் வழிபாடோ பிரார்த்தனையோ இணைக்கப்படுவதில்லை. ஒருவர் ஆன்மிகமான தன் பயணம் வழியாக பைபிளை அறிவதற்கான கல்வி
அத்துடன் பிற மெய்யியல்களுடன் இணைத்து ஓர் ஒட்டுமொத்த அறிதலை, அகவிரிவை அடைவதற்கான பயிற்சியும்கூட
ஜூன்21 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் இவ்வகுப்புகள் நிகழும்
ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு [email protected]
=======================================================
எங்கள் இணையப்பக்கம்