திரு.ஜெயமோகன் அவர்களுக்கு.
The end of philosophy is the beginning of Religion – Max Muller. German Philosopher.
முருகன் தமிழ் கடவுளா? என்ற கேள்வியில் ஆரம்பித்து Epigraphy, Anthropology, Philosophy ,Sociology என எல்லா மானுடவியல் தத்துவங்கள் மூலமாக முருகனுடைய வரலாற்றை தெளிவு படுத்தி உள்ளீர்கள்.கடந்த ஐந்து வருடங்களாக கி.வா.ஜா அவர்களின் திருப்புகழ் விளக்கவுரை, கிருபாநந்தவாரியர் சுவாமிகளின் முருகன் பற்றிய கதாகாலட்சேபம் கந்தபுராணம் ,அருணகிரிநாதரின் பல்வேறு முருக வழிபாடு விருத்தங்கள் படித்து கேட்டு வருகிறேன்.அவை எல்லாவற்றையும் சாறு போல பிழிந்து இந்த காணொளி யில் கொடுத்து உள்ளீர்கள். கொளமாரம் சைவசமயத்தில் சண்மதத்தின் ஒரு பகுதி. அதுவும் தமிழ் மொழி பேசும் தமிழர்களின் குறுஞ்சிநில கடவுள் என்பதை பல்வேறு கோணத்தில் விளக்கி உள்ளீர்கள். கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் என்ற சாதாரண முருக பக்தனுக்கும் முருகன் என்ற உணர்வில் திழைத்து உருகும் செயல் கண்டேன்.மனித குலம் தழைத்த வரலாற்றில் முருக வழிபாடு தவிர்க்க முடியாதது.வெற்றி வேல், கந்தன்,மயில்,சேவல்,ஆடு எல்லவற்றையும் வணங்கும் ஒரு சமயம் சைவம்.வைணவத்தில் தசாவதாரம். எத்தனை உயிரினங்கள் கடவுள்களாக.எல்லாம் பரிணாமக வளர்ச்சியில் மனிதன் கண்டு கொண்ட தெய்வங்கள்.பக்தி ஞானத்திற்கு இட்டு செல்லும் ஞானம் மோட்சத்திற்கு.முருகன் ஒரு மனித கூலத்தின் பிரதிநிதி.மானுடம் உள்ள வரை முருக மென்மேலும் தழைத்து மானுடமும் தழைத்து ஓங்கும் நன்றி உங்கள் காணொளிக்கு.
தா.சிதம்பரம்.
தோவாளை.











