நினைவுத்திறன், கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

நினைவுத்திறனை வளர்ப்பது பற்றிய உங்களுடைய காணொளி பலவகையிலும் எனக்கு உதவியாக இருந்தது.

நீங்கள் கூறுவது போல, இன்றைய வாழ்க்கையில் நினைவுத்திறன் என்பது வாழ்வதற்கான அடிப்படைத் திறன்களில் ஒன்றாகிவிட்டது. அதேசமயம், தேவையற்ற விஷயங்களை ஒவ்வொரு நாளும் நாம் தொடர்ந்து மனதில் சேர்த்துக்கொண்டே இருப்பதால், உண்மையில் தேவையானவை நம் நினைவில் ஆழமாகப் பதியாமல் போய்விடுகின்றன. இதனால் நமக்கு தெளிவான நினைவுத்திறன் இருப்பதில்லை; தேவையான நேரத்தில் தேவையான விஷயங்களை நினைவுகூரவும் முடிவதில்லை.

என்னுடைய அனுபவத்தில், இரவில் தூங்குவதற்கு முன்பு எதை மனதில் நிறுத்திக்கொண்டு உறங்குகிறோமோ, அதுவே பெரும்பாலும் நினைவில் நீடிப்பதாகத் தோன்றுகிறது. யோகம், தியானம் போன்ற பயிற்சிகளில் பெரும்பாலானவை நினைவுத்திறனை மேம்படுத்துவதற்கு உதவுகின்றன என்றும் நினைக்கிறேன். அதைவிட, தூக்கத்தைச் சரிசெய்துகொண்டாலே பல நினைவுத்திறன் தொடர்பான பிரச்சினைகள் சரியாகிவிடுகின்றன என்பதையும் நான் கவனித்திருக்கிறேன்.

இந்தக் காணொளி எனக்கு பல வகையிலும் பயனுள்ளதாக இருந்தது.

நன்றி.

முந்தைய கட்டுரைதனிப்பட்ட ஆலோசனைகள், கடிதம்