தத்துவம் நான்காவது வகுப்பு

அன்புள்ள ஜெ

தத்துவக் கல்வி நான்காம் வகுப்புக்கான அறிவிப்பு தளத்தில் வெளியாகவே இல்லை. அதற்குள் ஏற்கனவே பட்டியலில் இருந்து அந்த குறிப்பு மறைந்துவிட்டிருக்கிறது. வகுப்பு நடைபெறுகிறதா?

சந்திரசேகர்

அன்புள்ள சந்திரசேகர்,

நான்காம் தத்துவ வகுப்புகள் இரண்டு மாதம் முன்னரே அறிவிக்கப்பட்டுவிட்டன. ஓர் அறிவிப்பு முகப்பாக இருந்தாலும் வரவிருக்கும் நிகழ்வுகள் கீழே வரிசையாகக் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றைப் பார்த்து விண்ணப்பித்துக்கொண்டிருந்தார்கள். இடங்கள் நிறைந்து விட்டன. ஆகவே முதல்பக்க அறிவிப்பாக அந்தச் செய்தி வரவில்லை.

இனிமேல் தத்துவ வகுப்புகள் 4 ஆவது வகுப்பு இரண்டாம் அணி ஆகஸ்டில் அல்லது செப்டெம்பரில் நடைபெறலாம்.

எந்த வகுப்புகளில் இடமிருக்கிறதோ அது மட்டுமே அந்தப் பட்டியலில் கீழே தென்படும். மற்றவை நீக்கப்பட்டுவிடும்

 

ஜெ

 

 

முந்தைய கட்டுரைஇந்து மதத்தை கற்று அறியவேண்டுமா?
அடுத்த கட்டுரைவாசிப்புப் பயிற்சி, கடிதம்