மலைகள்

அன்புள்ள ஜெ

நீங்கள் ஆல்ப்ஸ் மலையுச்சியில் நின்று பேசிய அந்தச் சிறிய காணொளியைக் கண்டேன். நானும் தொடர்ச்சியாக மலைகளுக்குச் சென்றுகொண்டிருப்பவன். நான் சிறுதொழில் செய்பவன். தொழில் அளிக்கும் சலிப்பும் சோர்வும் எனக்குப் பயணங்களால்தான் இல்லாமலாகிறது. மலையுச்சிகளிலுள்ள தனிமை, அகன்ற காட்சி எல்லாம் சேர்த்து வாழ்க்கையையே ஒட்டுமொத்தமாக விலகி நின்று பார்க்க உதவுகின்றன. என் வாழ்க்கையின் சிறந்த முடிவுகளை எல்லாம் மலையுச்சிகளில்தான் எடுத்துள்ளேன். எல்லா புத்தாண்டையும் மலையுச்சியில்தான் கொண்டாடி வருகிறேன். என் வாழ்க்கையை மலையுச்சியில் இருந்துதான் தொகுத்துப் பார்க்கிறேன். ஆனால் அத்தகைய பல உச்சிகள் நம் வாழ்க்கையில் வேண்டும் என்று நீங்கள் இந்த காணொளியில் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.

சரவணக்குமார் மாணிக்கம்

முந்தைய கட்டுரைஆங்கிலவழி தத்துவம், இளைஞர்கள்