அன்புள்ள ஜெயமோகன்,
எழுத்தாளனின் அரசியல் பற்றிய உங்களுடைய கட்டுரைகளை பார்த்தேன். உங்களுடைய காணொளிகளையும் கவனித்தேன். ஒரு எழுத்தாளன தன்னை ஒருபோதும் அரசியலாளராக முன்வைத்துக் கூட கூடாது .அப்படி முன்வைத்தால் அவன் ஏதோ ஒரு வகையில் அந்த அதிகாரத்தை நோக்கி விரை அதிக செல்ல விரும்புகிறான் என்றுதான் அர்த்தம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது எழுத்தை அதிகாரத்திற்காக பயன்படுத்துகிறான் என்ற பொருள் கொடுக்கும் .அந்த எழுத்தின் மதிப்பு முற்றிலும் இல்லாமல் ஆகும்.
மனித வாழ்க்கையை புரிந்து கொள்ளவும் மனித வாழ்க்கையை மேம்படுத்தவும் மட்டுமே தன் எழுத்தை கையாளுபவன்தான் சிறந்த எழுத்தாளனாக இருக்க முடியும். வேறு எதற்காக ஒருவன் எழுத்தைப் பயன்படுத்தினாலும், அது எத்தனை அறம் சார்ந்த உயர்ந்த இலக்கு கொண்டு இருந்தாலும் கூட அது இரண்டாம் பட்சமான எழுத்தாகவே இருக்கும். இன்று விரும்பிய கட்சி அரசியலுக்கு தன்னுடைய எழுத்தை ஒருவன் அளிக்கும்போது அவன் தன் கடை படைப்பு சக்தியை விற்பனை செய்கிறான் என்றுதான் பொருள். அதை எளிய நுகர்வுக்காகவும் அதிகாரத்திற்காகவும் பிரித்து கிழித்து கிழித்து சந்தையில் வைக்கிறாய்
இன்று ஒவ்வொருவரும் அரசியலைப் பேசி ஆக வேண்டிய கட்டாயத்தை இந்த ஊடகம் உருவாக்குகிறது. அரசியல் பேசவில்லை என்றால் உங்களை எவரும் கவனிக்க மாட்டார்கள். உங்களுக்கு இங்கே இடமே இல்லை என்ற எண்ணம் ஏற்படும். உங்கள் குரல் காற்றில் மறைவது போல் இருக்கும். அந்த ஒரு காரணத்துக்காகவே பலர் அரசியலை பேசுகிறார்கள். ஆனால் அரசியலைப் பேசும்போது கேட்க வருபவர்கள் எவரும் உங்களை எழுத்தாளர்களாக நினைத்து வரவில்லை. இன்னொரு வகையான அரசியல் பேச்சாளராக மட்டும்தான் நினைக்கிறார்கள்.
உங்களை அவ்வாறு கவனத்தில் கொண்டு வர வேண்டும் என்றால் அதைவிட எளிய வழி என்பது ஏதாவது பொருளை கூவி விற்பதுதான். அது இன்னும் அதிக கவனத்தை கொண்டு வரும். பணமும் சேரும். எழுத்தாளர்கள் தங்களுடைய அடையாளத்தை பேணிக்கொள்வது முக்கியம். விற்பனையாளராகவோ அரசியல்வாதியாகவோ கேளிக்கையாளனாகவோ ஒருவன் தன்னை காட்டிக் கொண்டு விட்டான் என்றால், அவனுடைய இலக்கியத்தை அவனே மறைத்துக் கொள்கிறான் என்று அர்த்தம்.
அந்த வகையில் உங்களுடைய கருத்துடன் இணைகிறேன்.
எம்.ராஜரத்தினம்










