ஜெ
செல்பேசி அடிமைத்தனம் குழந்தைகளை எப்படி அழிக்கிறது என்பதை பரவலாக எல்லா ஊடகங்களும் சொல்லிக்கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மையில் அதற்கு என்ன செய்வது என்பதுதான் நமக்கு தெரியவில்லை. குழந்தைகளுக்கு ஆக்டிவிட்டிகள் தேவை என்கிறார்கள். ஆனால் குழந்தைக்கு சின்ன வயதில் செல்பேசி அடிக்ஷன் வந்துவிட்டால் அது எந்த ஆக்டிவிட்டிக்கும் வருவதில்லை என்பதே உண்மை. செல்பேசி அடிமைத்தனம் பள்ளிக்கூடத்தில் இருந்தே வந்துவிடுகிறது. பல பள்ளிகளில் திபமும் பாடத்திட்டம் எல்லாவற்றையும் செல்பேசியிலே பார்ப்பதற்கு அவர்களே சொல்கிறார்கள். நம் வாழ்க்கையை இந்த ஊடகங்கள் அழிக்கின்றன, ஆனால் மாற்றுவழி தெரியவில்லை.
சந்திரா










