கருத்தாடல் – வாழும் தமிழ்.

அன்புள்ள ஜெயமோகன்,

வாழும் தமிழ் இலக்கிய நிகழ்வின் காணொளிகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு விவாதமும் மிகத் தீவிரமான நிலையில் தான் நடந்திருக்கிறது. ஒருவர் கூட பேச்சில் சோடை போனதாக சொல்ல முடியாது. அனைவருமே மிகுந்த பொறுப்புடன் தயாரித்து கொண்டு வந்து பேசி இருப்பது தெரிகிறது. ஒவ்வொருத்தருடைய கருத்துக்களும் ஒன்றுடன் என்று மாறுபட்டு தனித்தன்மையுடன் நிற்பதும் மிகுந்த ஆச்சரியம் அளிக்கிறது. நியூயார்க்கின் தரத்திலேயே மிக அரிதான ஒரு நிகழ்வு என்றுதான் நினைக்கிறேன். அமெரிக்காவில் இருந்து பங்கு பெற்றவர் அவர்களும் அவ்வாறே உணர்ந்தார்கள் என்பதை நிகழ்வில் பங்கெடுத்தவர்கள் சொன்னார்கள்.

ஒரு நிகழ்வை ஒருங்கிணைப்பதில் உள்ள பெரும் சவால்கள் எனக்கு தெரியும். ஆனால் அதை அறிவார்ந்த முறையிலே முழுமையான தீவிரத்துடன் நடத்தி முடிப்பது என்பது அதற்கு விட பத்து மடங்கு பெரியது. இன்று உலகம் முழுக்க கருத்தரங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன .பெரும்பாலான கருத்தரங்களால் எந்த பயனும் இல்லை என்பதுதான் உண்மை.அவை ஒரு ஒப்புக்காக நடத்தப்படுகின்றன .கருத்துக்கள் ஒருவரை ஒருவர் சென்றடைந்துவிட்டது என்பதை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்திக் கொள்வது மட்டும்தான் பெரும்பாலான கருத்தரங்களின் நோக்கமே ஒழிய ஒவ்வொரு அந்த கருத்துக்களை எப்படி புரிந்து கொண்டார்கள் என்பதை அக்கருத்தரங்குகளைக் கொண்டு எந்த வகையில் முடிவெடுத்துக் கொள்ள முடியாது என்பதுதான் நடைமுறையில் சாத்தியமாக இருக்கிறது, இலக்கியத்திலும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.

அதை தாண்டி இந்த நிகழ்வு இத்தனை தீவிரமாக நடந்திருப்பது என்பது மிக ஆச்சரியம் அளித்தது. நான் கார்ப்பரேட் துறையில் நீண்ட காலமாக இருக்கிறேன், இந்த தளத்தில் ஒரு கருத்தரங்கை கூட இதுவரைக்கும் நான் பார்த்தது இல்லை என்பது தான் உண்மை.

அடுத்த ஆண்டு லண்டனின் நிகழவிருக்கும் வாழ்வு தமிழ் இலக்கிய விழா தீவிரத்துடன் நிகழ வேண்டும். நம் இலக்கியம் உலக அளவில் கவனிக்கப்படுவதற்கு இந்த விழாக்கள் அளிக்கும் பங்களிப்பு மிக முக்கியமானது. வாழ்த்துக்கள்.

அரவிந்த் கணேஷ்

முந்தைய கட்டுரைஎனக்கானவை!
அடுத்த கட்டுரைஇலக்கிய முகாம்கள் எதற்காக?