அன்புள்ள ஜே,
உங்கள் இலக்கிய அறிமுக நூல்களை தொடர்ந்து படித்து வருகிறேன். நவீன தமிழ் இலக்கிய அறிமுகம், வாசிப்பின் வழிகள், எழுதும் கலை போன்ற நூல்கள் .இந்த் நூல்கள் வழியாக எனக்கு கிடைத்த இலக்கியப் புரிதல் என்பது பல ஆண்டுகளாக நான் நேரடியாக இலக்கியப் படைப்புகளை படித்து விவாதித்ததை விட பல மடங்கு அதிகமானது.
இந்த நூல்களை ஒட்டிய இலக்கியப் யிற்சி வகுப்புகளை நீங்கள் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யலாம் என்று தோன்றுகிறது. இலக்கியத்தில் ஆர்வம் உடையவர்கள இந்த பயிற்சி வகுப்புகளுக்கு வந்து இவற்றை கற்றுக் கொள்வது மிகவும் உதவியாக இருக்கும் அல்லவா?
எம்.மகேஸ்வரன்.
https://www.nammabooks.com/naveena-thamizhilakkiya-arimukam
அன்புள்ள மகேஷ்,
இலக்கியப் பயிற்சி வகுப்புகளை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதற்கு எத்தனை வாசகர்கள் இருக்கிறார்கள் என்பது ஒரு சந்தேகத்திற்கு இடமான விஷயம். சென்ற ஜூனில்கூட ஒரு இலக்கிய பயிற்சி வகுப்பு நடந்தது அதில் இலக்கிய வடிவங்களையும் இலக்கிய கொள்கைகளையும் எளிதாக அறிமுகம் செய்தேன். வகுப்புகளுக்கு ஓரளவுக்கு பங்கேற்பாளர்கள் உள்ளனர். ஆகஸ்ட் இறுதி வாரத்தில் பெண்களுக்கு மட்டுமான ஒரு இலக்கிய பயிற்சி வகுப்பை நடத்தலாம் என்று இருக்கிறோம்
ஜெ












