நிலவுக்குக் கீழ்

Screenshot

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு

பெண்களுக்கான இலக்கிய வகுப்பு என்றதுமே மனம் ஆர்வம் கொண்டுவிட்டது. கற்றல் என்றும் இனிமையானது, எனினும் சமகால பெண்கள் தங்கள் எழுத்து, வாசிப்பு மூலம் அடையக்கூடியவற்றிற்கான தடைகள் மிக பெரிதானது எனும் கற்பிதங்களை அகற்றுவதாக இவ்வகுப்பு அமைந்தது சிறப்பு. சிரித்தவண்ணம் கற்றோம் அனைத்து நாட்களிலும்.  

Male chauvinist என்று உங்களை நீங்கள் தன்னடக்கத்துடன் கூறி வகுப்பை தொடங்கியதில் ஆரம்பித்த சிரிப்பு அது.

Dependency syndrome, gender consciousness, female sensibility/feminism, surviving vs living, ஜிக்ஞாஸா, ஸ்வதர்மம், எல்லோரும் எழுதலாம், ஏன் எழுத வேண்டும் என்று அழைத்து சென்ற பாதை வெளிப்படையான மனதுடன் அமர்ந்த ஒவ்வொருவருக்கும் மென்மையான ஆனால் ஆழமான மனமாற்றத்தை அளித்திருக்கும்.

பெண்களின் எழுத்து, வாசிப்பு பெரும்பாலும் எப்படி petty thingsல் சுழல்கிறது என்பதற்கான எடுத்துக் காட்டுகள் அட்டகாசம். வரலாறு/தத்துவம்/sarcasam/irony என்று மனமும், மொழியும், எழுத்தும் விரிவதற்கான பாதைகள் அனைவரையும் ஈர்க்கும்படி அமைந்தது

பௌர்ணமி என்பதினால் இரவு கேள்வி பதில் வகுப்பு நிலவுடன். நிலவு பாடல் அல்லது கவிதையுடன் கேள்வி கேட்க வேண்டும். நிறைய நிலவு பாடல்கள், கேள்விகள், நிலவு வெளிவரும்தோறும் ஒளிபெற்ற முகங்கள் என

சுசித்ரா, தங்களை கவர்ந்த பெண் எழுத்தில் மட்டுமே கண்ட அம்சம் என்ன என்ற கேள்விக்கு தாங்கள் அளித்த பதில் மனிதம் அடைய வேண்டியதின் மென் தீற்றலாகவே எனக்கு தோன்றியது

சிறுகதை, கட்டுரை எழுதுவது பற்றியான வகுப்பு நேர்த்தியான எழுத்தை கோருவதாக இருக்கிறது

poetry பற்றியான வகுப்பு மரபு, நவீன கவிதையின் வேறுபாடுகள், வரலாறு எனத் தொடங்கியது. நவீன கவிதையில் பிரிப்பதினால் வார்த்தை கொள்ளும் அழுத்தம், கவிதை கொள்ளும் பொருள் பற்றிய தெளிவு அழகு

குறிப்புருவகம்(allegory)/கவியுருவகம்(metaphor)/படிமம்(image) பற்றி ஒவ்வொன்றுக்கும் கூறிய கவிதைகள் நாங்கள் மனதில் காட்சியாக கொண்ட புரிதல்கள் அதன் பின்னான தங்களின் ஒன்றிரண்டு வரி விளக்கம் வகுப்பு முடிந்தும் ஓடிக்கொண்டிருந்தது

வெள்ளிமலையில் இருந்து திரும்பும் போது கல்பனா அவர்களுடன் இணைந்து கொண்டோம். அவர் கார் இயக்க நான், ராஜீ, ஹேமா, உஷா  அவர்கள் என மூன்று தலைமுறை பெண்களாக பயணப்பட்டோம். கவிதை பற்றி பகிர்ந்து கொண்டது இனிய நினைவு. ஒவ்வொருவருக்கும் மனம் ஒவ்வொரு கவிதையில் தங்கியிருந்தது போல் தோன்றியது. சிறிது நேர வகுப்பாக இருந்தாலும் சிறப்பான அனுபவமாக அமைந்தது.

சித்ரா கேட்டதினால் கூடுதலாக அமைந்த மேடையுரை வகுப்பிற்கும் நன்றி. இந்த வகுப்பு நிகழ காரணமாக இருந்த கல்பனா அவர்களுக்கும், கிருஷ்ணன் சாருக்கும் நன்றிகள்

அன்புடன் 

ப்ரீத்தி

முந்தைய கட்டுரைபறவைபார்த்தல் வகுப்புகள்