
தொடர்புக்கு மின்னஞ்சல் செய்யவும் - [email protected]
மே 16 17 மற்றும் 18 (வெள்ளி சனி ஞாயிறு) கிழமைகளில் லோகமாதேவி நடத்தும் தாவரங்கள் அறிமுக வகுப்புகள் நிகழும். ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்.
சென்ற ஆண்டில் இரண்டு முறை பறவைகள் பார்த்தல் நிகழ்வை நடத்தினோம். எங்கள் நோக்கம் இன்றைய வாசகர்கள் இயற்கையுடனான உறவை உருவாக்கிக்கொள்வதற்கான வழியை அமைத்தலாக இருந்தது. மெய்யியல் ஆர்வம், தியானப்பயிற்சி கொண்டவர்கள் இயற்கையுடன் உறவை உருவாக்கிக் கொள்ளவில்லை என்றால் அவர்களின் பயணம் நிறைவடைய முடியாது. அதற்குரிய சிறந்த வழி பறவை பார்த்தல்.
ஆனால் நடைமுறையில் அது பத்துவயது முதலான குழந்தைகளுக்கு கவனத்தைக் குவிப்பதற்கான பயிற்சிமுறையாக ஆகியது. ஏராளமான பெற்றோர் குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். செல்பேசியில் மூழ்கியிருக்கும் குழந்தைகள் ஒரு காட்டுச்சூழலில், பறவைகளுக்காக ஆழ்ந்த கவனம் கொண்டு காத்திருப்பதைக் கண்டனர். குழந்தைகள் இன்றைய ஊடகச் சூழலின் அலைக்கழிப்புகளில் இருந்து வெளிவருவதற்கான ஒரு சிறந்த வழியாக அது இருந்தது.
பறவைபார்த்தலுடன் இயல்பாக இணையவேண்டிய ஒன்று தாவரங்களைப் பற்றிய அறிதல். நம்மைச் சூழந்திருக்கும் செடிகள், மரங்கள், மலர்கள் பற்றிய ஓர் அடிப்படைப்புரிதல் நமக்கும் இயற்கைக்குமான ஆழ்ந்த உறவின் தொடக்கமாக ஆகும்தன்மை கொண்டது. ஒருமுறை அந்த திறப்பை அடைந்துவிட்டால் செல்லுமிடமெல்லாம் நாம் செடிகளை, மரங்களைப் பார்க்க ஆரம்பித்துவிடுவோம். அது ஒரு பெரிய அகவாழ்க்கை.
இது தாவரவியல் கல்வி அல்ல. நம் தோட்டத்துச் தாவரங்கள், நம்மைச்சூழ்ந்து ஊரிலுள்ள தாவரங்கள், காட்டுத்தாவரங்கள் என அடிப்படையான செடிகொடிகளின் பெயர்கள், இயல்புகள் பற்றிய ஓர் அறிமுகம் மட்டுமே. ஒரு பொதுவான அறிவியக்கவாதி, ஒரு மாணவர், ஒரு குடும்பத்தலைவி அறிந்திருக்கவேண்டிய செய்திகள். சிறிய கானுலாவுடன் இதை கற்பிக்கிறோம்.
முனைவர் லோகமாதேவி தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்றவர் , பேராசிரியர். உலகப்புகழ்பெற்ற தாவரவியல் இதழ்களில் எழுதிவருபவர். ஸாகே போன்ற முக்கியமான, மிகச்ச்வாரசியமான தாவரவியல் நூல்களை எழுதியவர். தாவரவியல் செய்திகளை இத்தனை ஈர்ப்புடன் எழுதமுடியுமா என வாசகர்களை எண்ணச்செய்தவர்.
தொடர்புக்கு மின்னஞ்சல் செய்யவும் - [email protected]
மற்ற வகுப்புகள்
Additional Details
Category -