அன்புள்ள ஜெ,
நான் சென்ற கிறிஸ்தவ இறையியல் வகுப்பில் கலந்து கொண்டேன். மீண்டும் நடைபெறவுள்ள வகுப்பு பற்றிய அறிவிப்பைக் கண்டதும் ஆசிரியர் திரு.சிறில் அலெக்ஸ் அவர்களைப் பற்றி என் அனுபவத்தை எழத வேண்டும் என்று தோன்றியது. சிறந்த பாடத்திட்டத்தை வகுத்து வகுப்பு எடுத்தார். அது கிறிஸ்தவ இறையியல் மற்றும் திருவிவிலியம் பற்றி சுருக்கமான அறிமுகம்தான். ஆனால் விசாலமானது. ஆழமானது. எப்போதும் சிரித்த முகம். சந்தேகங்களுக்கு விளக்கமான தெளிவு. பேச்சிலேயே நட்பு தொனிக்கும்.
மூன்று நாள் வகுப்பு மகிழ்ச்சியாகவும் உயிரோட்டமாகவும் இருந்தது. வகுப்பிற்குப் பின்னரும் குழுவில் தொடர்ந்தார். மேகமூட்டமாக இருந்த கிறிஸ்தவம் பற்றிய எனது அறிதல் அவரால் தெளிவானது. அவர் கூறிய திருவிவிலியத்தைப் படித்து நான் அடைந்தது என்ன என்று குழுவில் பதிந்தேன். அவரால்தான் எனக்கு இது சாத்தியமாகியது.சுருக்கமாக அவர் ஒர் சிறந்த ஆசிரியர். இனியவர். நட்பானவர். மேலும் சிறந்த மனிதர். அவர் ஒரு சிறந்த தேர்வு.
சிவநாத். ஸ்ரீரங்கம் .