அன்புள்ள ஜெ
தகுதி இருக்கிறது, வாய்ப்பு இல்லை என்றும் தகுதி இருக்கிறது அங்கீகாரம் இல்லை என்றும் சொல்லும் குரல்கள் இன்று மிக அதிகமாகவே ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் தகுதியான ஒருவரை ஒரு வேலைக்காக தேடிப்பாருங்கள். கஷ்டம் தெரியும். ஆளே கிடைக்க மாட்டார்கள். என்ன சிக்கல்? தகுதி என இவர்கள் நினைப்பது பலசமயம் கல்வித்தகுதி, குறிப்பிட்டதுறையில் வேலைசெய்த தகுதி. ஒரு வேலையைச் செய்து முடிக்கும் தகுதி அல்ல. ஒருவர் ஒருவேலையைச் செய்து முடிக்கும் திறமை கொண்டவர் என்று வைத்துக்கொள்வோம். அவர் செய்யும் அந்த வேலை சமூகத்திற்கு அவசியமான வேலை என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு எப்படி வாய்ப்பு கிடைக்காமல் போகும்? பெரும்பாலும் தகுதி என்பது சொல்லளவிலேயே இருக்கும். தாங்களே உருவாக்கிக்கொண்ட ஒரு கற்பனையுலகில் அந்த தகுதிகளை பயன்படுத்திக்கொண்டும் இருப்பார்கள். இதுவே நடைமுறை உண்மை.
ஜெயவேல் ராஜ்












