அன்புள்ள ஜெயமோகன்,
முழுமையறிவு அமைப்பின் தொடர்ச்சியான வகுப்புகள் வழியாக நீங்கள் உருவாக்கி வரும் ஒரு அலையை கவனித்துக் கொண்டிருக்கிறேன். ஏறத்தாழ 2000 பேர் இந்த வகுப்புகளில் பலவகையிலும் கலந்து கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். அனைவருக்கும் ஏதோ ஒருவகையில் இது உதவுகிறது. எதிர்மறை மனநிலைகளைக் களைந்து நேர்நிலையான கல்வியின் அன்பையும் களிப்பையும் இது அளிக்கிறது. மெல்ல ஒரு ஒட்டுமொத்தமான இயக்கமாக இது மாறி வருகிறது.
அன்றாட வாழ்க்கையின் எளிய சிக்கல்களைத் தீர்ப்பது, அதற்காக் தியானம் போன்றவற்றை பயில்வது என்பது அளவில்தான் இன்றைக்கு இது போன்ற கம்யூன்கள் உள்ளன. அதற்கு அப்பால் ஆழமான தத்துவம் கலை இலக்கியம் ஆகியவற்றை பயில்வதற்கான இத்தகைய ஓர் அமைப்பு என்பது மிகப்பெரிய ஒரு கொடை. தமிழகத்தில் இதைப்போன்ற் இன்னொன்று இல்லை.
இது இன்னும் பெரிய அளவில் பல கிளைகளுடன் பிரிந்து வளர்ந்து ஒரு ஆலமரமாக ஆக வேண்டும் என்ற கனவு எனக்குள்ளது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சிதம்பர ராமநாதன்












