ஜெயமோகன் அவர்களுக்கு,
அறிவதிகாரம் என்பதை பற்றிய உங்களுடைய காணொளியை சற்று தாமதமாகிய போது தான் பார்த்தேன். அதற்கு கொஞ்சம் நேரம் முன்னால் தான் கமல்ஹாசன் உங்களுடைய வாழும் தமிழ் நிகழ்ச்சி பற்றி பேசியதை பார்த்தேன். இந்த எல்லா முயற்சிகளும் உலகின் மையத்தில் அறிவை அதிகாரத்தை வெல்வதற்கான ஒரு தாவல் தான் என்று எண்ணம் மிகுந்த மனக்களர்ச்சியை ஏற்படுத்தியது .
அறிவதிகாரத்தை அடைவது என்பது இனம், பணம், அரசியல் அதிகாரம் என பலவற்றுடன் சம்பந்தப்பட்டிருந்தாலும்கூட எப்போதுமே அதற்கான உந்துதலுடன் இருப்பது அடிப்படையானது. அறிவாதிகாரம் என்பது உண்மையில் வாழ்வதற்கான அதிகாரம் ,சிந்திப்பதற்கான அதிகாரம். அது ஒரு உரிமை .அது நம்மை ஆற்றல் உடையவர்களாக ஆக்குகிறது.
இந்த முயற்சி வெல்ல வேண்டும். தமிழின் குரல் உலகத்தில் ஒலிக்க வேண்டும். அதன் பொருட்டு எடுக்கப்படும் இந்த முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
லோகநாதன்









