வணக்கம்
அன்புள்ள ஜெ அவர்களுக்கு ,
ஆர்வமுள்ளவர்களுக்கு சிறந்த அறிமுக உரை . முக்கியமான உடல் மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு, பயிற்சியின் வாயிலாக அவை மேன்மை அடைவதும். பயிற்சியின் மூலம் வாழ்வின் அடுத்த பரிணாமம் நோக்கி செல்வது தியான மரபின் ஒரு வழிமுறை என்பது பற்றிய அறிமுக உரை மிகவும் நேர்த்தியாக அமைந்தது. மனதினுடைய தொடர் ஓட்டத்திற்கு உளம் குவிவதன் வாயிலாக ஆற்றலை உற்பத்தி செய்து புத்துணர்வுடன் அன்றைய நாளை நிறைவுடன் முழுமை செய்ய பயிற்சி கருவிகள் வாழ்வில் பெரிதும் உதவுவது பற்றியும் . உடலில் ஏற்படும் பதற்றம் பயம் போன்ற உணர்வுகள் செரிமான மண்டலத்தை பாதிக்கும் என்பது போன்ற ஆழ்ந்த பார்வை டிஎன்ஏ தொடர்ச்சியின் தொடர்பு பற்றிய தகவல் புதியவர்கள் மற்றும் தியான மார்கத்தில் பயணிக்கும் அனைவரும் உணர்ந்து பயிற்சியின் வாயிலாக மேம்படுத்திக்கொள்ள உதவும்…
உடலுக்கு தூக்கம் இன்றியமையாதது போல மனதிற்கு தியானம் யோகம் போன்ற வழிமுறையின் முக்கியத்துவம் பற்றிய பார்வை நல்ல திறப்பாக அமையும் … சைதன்ய ஒளிக்கீற்றுஅனைவரின் உள்ளும் நிறைந்து ஒளிர தாங்களின் இந்த காணொளிக்கு குரு மரபிர்க்கும் ஜெ அவர்களுக்கும் , தாங்களுக்கும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் . குரு அவர்களின் தியான முறைகள் தொடர் பயிற்சியின் வாயிலாக நிறைவுடன் வாழ்வை கணங்களில் கடந்து செல்ல பெரிதும் உதவும்.
ஒவ்வொரு சத் சங்கங்களிலும் புதிய கருவிகளை அருள செய்வார்கள். அவை அனைவருக்கும் தங்களுக்கு உரியதா என அவதானிக்கவும். அதன் அனுபவம் சார்ந்து கலந்து உரையாடவும் சந்தேகங்களை குருவுடன் பகிர்ந்து கொண்டு மேம்படுத்தி கொள்ளவும் .. மாத மாதம் நடைபெறும் பயிற்சி வகுப்புகள் பெரிதும் பயனுள்ளதாக அமைகிறது . இவை அனைத்தும் எனக்கு சாத்தியம் பெற வாய்ப்பு அளித்த தங்களுக்கும் தாங்களுடன் செயலாற்றும் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள் ….
நன்றி ஜெ
சிசுபாலன் கிருஷ்ணமூர்த்தி