அன்புள்ள ஜெ
சில சமயங்களில் நீங்கள் மிகுந்த அந்தரங்கத்தன்மையுடனும் நெகிழ்ச்சியுடனும் உங்களுடைய தனிவாழ்க்கையைப்பற்றிப் பேசும் காணொளிகள் மனதுக்கு மிக நெருக்கமானவை. அவை நமக்கும் ஆழ்ந்த நம்பிக்கையை அளிக்கின்றன. உங்கள் ஆசிரியர் பற்றி நீங்கள் பேசியுள்ள காணொளி அத்தகைய ஒன்று. அதிலுள்ள பணிவும் வணக்கமும் கலந்த குரல் உங்கள் ஆசிரியர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் பெருமதிப்புக்கான சான்று. நம் ஆசிரியர்கள் அளவுக்கு நம்மைப் புரிந்துகொண்டவர்கள் இல்லை என்பதை நாம் வாழ்க்கை வளர வளர தெரிந்துகொள்வோம். நல்லாசிரியர்களை அடைவதென்பது ஒரு பெரிய நல்லதிருஷ்டம். அது நிறையவே அமைந்தவர் நீங்கள்.வாழ்த்துக்கள்.
ராஜசுந்தர்











