துறத்தல்

வயது இருபதை நெருங்கும் இரு மகள்களுக்கு தாய் நான். இன்னும் அவர்களை நான் தான் வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்த நானே இப்போதுதான் வளர ஆரம்பித்து இருக்கிறேன். அந்தஇப்போதுகடந்த இரண்டு வருடமாக .

இரண்டு வருடங்களாகத்தான் உங்களை வாசிக்கவும் நீங்கள் ஒருங்கிணைக்கும் வகுப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும் தொடங்கியுள்ளேன்.

சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் நீங்கள் கூறிய ஒரு வார்த்தைநம் குழந்தைகளை ஒரு கட்டத்திற்கு மேல்  Disown செய்ய கற்றுக் கொள்ளுங்கள்என்று.

இதை சில மாதங்களாக நானும் முயற்சித்து வருகிறேன். இதை இன்னும் சிறப்பாக செய்து எனக்கும் என் மகள்களுக்குமான உறவு மேம்பட ஆசிரியரின் சில வார்த்தைகள் வேண்டும். அறிவுரையாக எடுத்துக் கொள்வேன்.

 நிர்மலா 

 அன்புள்ள நிர்மலா

நாம் நீண்டகாலமாக தியாகம் என்னும் விழுமியத்தைப் போற்றி வந்தவர்கள். பிறருக்காக வாழ்தல் என்பதே சிறந்த வாழ்க்கை என்று கற்பிக்கப்பட்டவர்கள். 

அது உலகியல் தளத்தில் சரியானதே. அன்னை தன் குழந்தைகளுக்காக வாழ்வதில் இருந்து எல்லா உறவுகளும் தியாகங்களின் மேல் தான் கட்டப்பட முடியும். அளித்தலே சிறந்த உறவை அமைக்கிறது, பெறுதலும் பெற்றவற்றுக்கு கணக்கு நோக்குதலும் உறவுகளை அழிக்கிறது.

இதைஅர்த்தநிலை சார்ந்தது என்று கொள்வோம். பரமார்த்திகம் என ஒன்றுண்டு. இதற்கு அப்பாலுள்ளது. அதில் தன்னல அம்சம் ஒன்றுண்டு.

ஒருவர் தன் அறிவு நிறைவை, தன் ஆன்ம முழுமையை தானேதான் தேடிக்கொள்ளவேண்டும். அந்தப்பாதையில் துணை என எவருமில்லை. முன்னர் சென்றவரின் சொற்கள் வழிகாட்டி ஒலிகள் மட்டுமே

அங்கே நாம் நம்மை கடந்தே ஆகவேண்டும். நம் உலகியலை துறக்கையில் அதன் பகுதியாக உள்ள உறவுகளை துறந்தாகவேண்டும். எவருக்கும் நாம் பொறுப்பேற்றுக்கொள்ள முடியாது. அது ஒரு வகை தன்னலமே. ‘

(தன்னலம் அற்ற பொதுச்சேவை என ஒன்றுண்டு. அதுவும் தன் ஆன்மநிறைவுக்கான பாரதை என்பதனால் மறைமுகமாக தன்னலம் கொண்டதே)

நான் சொல்வது முழுத்துறவை அல்ல. அது எளிதில் இயல்வது அல்ல. எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு, எவ்வளவு முடியுமோ அவ்வளவு நாம் உலகியலுடன் கொள்ளும் விலக்கம்தான் தேவை

ஜெ 

முந்தைய கட்டுரைஒரு பெண்ணின் கடிதம்
அடுத்த கட்டுரைசம்ஸ்கிருதத்தின் இடம் என்ன?