Hi Aji,
முகாமில் இம்முறை சரியாக உரையாட இயலவில்லை.
முகாம் மிகச் சிறப்பாக அமைந்தது. இவை ஏற்கனவே ஓரளவு மேலோட்டமான அறிமுகம் இருந்தாலும், முறையாக ஒரு துவக்கம் இல்லையென்ற குறை இப்போது கழிந்தது. ஒட்டுமொத்தமாக முக்கிய விவாதங்களாக, ideas வளர்ந்து வந்துள்ளதைப் பற்றிய சித்திரத்தை மூன்று நாட்களுக்குள் அடைவது அரிதான அனுபவமாக அமைந்தது. இவ்வளவுதான் முகப்பு என்றும் இனி இங்கிருந்து துவங்கி விரிய வேண்டும் என்ற மலைப்பும் ஒரே நேரம் தோன்றுகிறது.
எனக்கு அனைத்து அமர்வுகளுமே பிடித்திருந்தன. Humeமிலிருந்து Kant வளர்த்தவை அனைத்துமே மிக ஆர்வமூட்டுபவையாக இருந்தன. Arithmetic – geometric truths intuitive ஆனவை பற்றிய பகுதிகள், time space causaulity ஐ உருவாக்குவது பற்றிய பகுதிகள் போன்றவை.
நீங்கள் அதிகம் இலக்கியம் பற்றி பேசவில்லை, ஆனால் Nietzsche பற்றி பேசுகையில் சொன்ன மனிதனில் உறையும் அடிப்படை தீமை, Will, Literary artistன் கண்ணோட்டம் குறித்த பகுதிகள் எல்லாம் இலக்கியம் பற்றி முற்றிலும் புதிய கோணங்களில் இருந்து பேசும் பரப்புகள் கொண்டவை என்று தோன்றியது. Of course இலக்கியம் தாண்டிய விஷயங்களையும். ஆனால் classics ஈடுபாடுகள் கொண்ட வாசகனாக இந்த பகுதிகள் உடனே கவர்ந்தன. Wittgensteinம் பிடித்தார். மொழியின் அடிப்படைகள் குறித்து யோசித்தவராதலால் ஒருவேளை படிமங்கள் குறித்து அவரிடம் பேச முடியும் என்று நினைத்துக் கொண்டேன்.
ஆனால் இவற்றுக்கு அப்பால் இந்த கொள்கைகளை கற்ற இன்னும் வேறெவராது ஒருவேளை இவ்வகுப்பை நடத்தியிருக்க முடியும். ஆனால் இயல்பாகவே இவற்றின் ஒருவகை வரட்டுத் தீவிரத்தை கடந்து சென்று இலகுவாக உங்களுக்கேயுரிய இயல்பான நகைச்சுவையுடன் இன்முகத்துடன் இவற்றை சொல்கிறீர்கள். அது என் வயதையொத்த உங்களில் வெளிப்படுவது ஒருவகை நம்பிக்கையாகவும் உள்ளது. அதுதான் உங்களை ஆசிரியராக ஆக்குகிறது என நினைக்கிறேன்.
தத்துவத்தில் intuition க்கு இத்தனை பெரிய இடம் உள்ளது என்று தொகுத்துக்கொண்டதே இல்லை. குறிப்புகளை தொகுத்துக்கொள்ள வேண்டும். எங்கிருந்தேனும் வாசிக்கத் தொடங்கவேண்டும். நல்ல நாட்கள், Thanks Aji
ஸ்ரீசிவாசன் அறிவரசன்