வாழும் தமிழ், எச்சரிக்கை.

நேற்று ஒரு கடிதத்தில் அமெரிக்காவில் நிழலும் வாழும் தமிழ் இலக்கிய விழா எந்த அளவுக்கு முக்கியமானது என்ற எனது மகிழ்ச்சியை தெரிவித்து இருந்தேன் ஆனால் அதன் பிறகு இன்னொரு எண்ணம் வந்தது அதை ஒரு பயம் என்னும் சொல்லலாம்

வாழும் தமிழ் நிகழ்ச்சி சிறப்பானது. ஆனால் என்ன நிகழக்கூடாது என்று எனக்கு தோன்றுகிறது என்றால் இந்நிகழ்ச்சியை மாதிரியாகக் கொண்டு மேலும் பல நிகழ்ச்சிகளை எந்த இலக்கிய அறிமுகமும் இல்லாதவர்கள், எந்த வகையிலும் அறிவுத்தகுதி இல்லாதவர்கள் நடத்தமுனையலாம். அவர்களுக்கு பலவகையான நிதிப்புலமும் அமைப்பு வலிமையும் இருக்கும். ஆனால் அவர்கள் இத்தகைய நிகழ்ச்சியின் மதிப்பை அழித்து நம்மை எவருமே மதிக்காமல் செய்துவிடுவார்கள்.

நாம்  நம்முடைய எளிமையான சண்டைகள் சச்சரவுகள் அரசியல் காழ்ப்புகள் சாதிக்கசப்புகள் ஆகியவற்றை அங்கே காட்டக்கூடாது. நம்முடைய மிகச் சிறந்த இலக்கியங்களை மட்டுமே முன்வைக்க வேண்டும். மிகச்சிறந்த தத்துவத்தை முன்வைக்க வேண்டும். அப்போது அது மரியாதை வரும் . நமது இழிவுகளைக் கொண்டு சென்று காட்டிவிடக்கூடாது. நம்முடைய சிறுமைகளை கொண்டு சென்று அவர்கள் முன்னால் வைப்பதாக முடிந்து விடக்கூடாது.

எதிர்காலத்தில் இந்த நிகழ்ச்சியை மாதிரியாக கொண்டு நிகழும் நிகழ்ச்சிகள் நமது மதிப்பை இறக்கி விடுமோ என்ற சந்தேகம் இப்போது எனக்கு எழாமல் இல்லை. ஏனென்றால் அமெரிக்காவில் எனது இருபது வருட அனுபவம் அப்படிப்பட்டது.

பாரதிக்குமார்

முந்தைய கட்டுரைவாழும்தமிழ் நிகழ்ச்சியும் பங்கேற்பாளர்களும்.