இளையதலைமுறையும் பெற்றோரும்

வணக்கம் ஐயா, 

நீங்கள் சமீபத்தில் பேசியஇன்றைய தலைமுறையின் பொறுப்பின்மைஎன்ற காணொலி பார்த்தேன். நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை என்றாலும், இந்த தலைமுறையின் பொறுப்பின்மைக்கு தொழில்நுட்பம் மட்டுமல்லாமல் பெற்றோயின் வளர்ப்பும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது. தன் பிள்ளைகளுக்கு அனைத்து வசதிகளும் உடனே செய்து தருவதால் அவர்கள் எதையும் தேடி கற்க உந்துதல் பெறுவதில்லை என்று நான் கருதுகிறேன்.

உங்கள் கருத்தை ஒரு காணொலியாக பதிவிட்டால் நன்றாக இருக்கும். மிக்க நன்றி.

Regards,

Muthu Vijayan

அன்புள்ள விஜயன்

உண்மைதான். இந்தியப்பெற்றோர் குழந்தைகளை அரசர்களைப் போல வளர்க்கிறார்கள். 22 வயதில் படிப்பு முடிந்ததும் அக்குழந்தை வேலைதேடும்போது பிச்சைக்காரன் ஆகிறர்கள். வேலைக்குப்பின் அடிமை ஆகிறது. இந்த மாபெரும் வீழ்ச்சி ஒரு பெரிய உளச்சிக்கலாக ஆகிவிடுகிறது.

ஜெ

முந்தைய கட்டுரைஉருது இலக்கியம், கஸல் மரபு, இசையுடன் அறிமுகம்.